ETV Bharat / entertainment

வெளியானது எல்.ஜி.எம் செகண்ட் லுக் போஸ்டர்:எதிர்பார்ப்பில் தல தோனியின் ரசிகர்கள்! - ஹரிஷ் கல்யாண்

எல்.ஜி.எம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எல்.ஜி.எம் செகண்ட் லுக்
எல்.ஜி.எம் செகண்ட் லுக்
author img

By

Published : May 29, 2023, 7:18 PM IST

கிரிக்கெட் உலகை தாண்டி தல தோனி திரை உலகிலும் கால் பதித்துள்ளார். அந்த வகையில் தோனி மற்றும் சாக்ஷி தோனி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பின் முதல் படமாக எல்.ஜி.எம் திரைப்படம் தயாராகி வருகிறது. தமிழ் மக்கள் மீது கொண்ட பற்று காரணமாகவோ எல்லது தமிழ் மக்கள் தோனி மீது கொண்ட பற்று காரணமாகவோ தோனி தனது முதல் படத்தை தமிழ் மொழியில் தயாரித்து வருகிறார்.

லெட்ஸ் கெட் மேரீட் என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் காதல், கல்யாணம், காமெடி, கலாட்டா என அனைவரின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் உள்ள சம்பவங்களை மையமாக வைத்து முழுக்க முழுக்க ஒரு ஃபேமலி எண்டெர்டெயின்மெண்ட் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து படக்குழு தற்போது எல்.ஜி.எம்-ன் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தோனி எண்டெர்டெயின்மெண்ட் அதில் "படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வழங்குகிறோம்! இந்த வேடிக்கையான பயணத்தில் எங்களுடன் சேர தயாராகுங்கள்" என குறிப்பிட்டுள்ளது. இந்த போஸ்டரை ரகிகர்கள் வெகுவாக வரவேற்றுள்ள நிலையில் தங்களது சமூக வலைதளப்பக்கத்திலும் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

  • Presenting the second look poster of #LGM! Get ready to join us on this fun journey. #LGM படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வழங்குகிறோம்! இந்த வேடிக்கையான பயணத்தில் எங்களுடன் சேர தயாராகுங்கள்! pic.twitter.com/nR2UydHcWp

    — Dhoni Entertainment Pvt Ltd (@DhoniLtd) May 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த படத்தை மேஷ் தமிழ்மணி இயக்கி உள்ளார். படத்தில் ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா, யோகி பாபு மற்றும் மிர்சி விஜய் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த போஸ்டரில் ஹரிஷ்கல்யாண் ஒரு பேருந்தின் நடுவில் அமர்ந்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அவரை சுற்று அமர்ந்திருக்கின்றனர். என்னதான் சொல்ல வருகிறது இந்த போஸ்டர் என்ற எதிர்பாப்பு ரசிகர்கள் மத்தியில் உயர்ந்துள்ள நிலையில் படம் எப்போது திரைக்கு வரும் எனவும் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க:நானும் ஒரு கிராமத்து பெண்; 'கழுவேத்தி மூர்க்கன்' அனுபவம் பகிரும் துஷாரா விஜயன்!

இந்தப் படத்தை விகாஸ் ஹசிஜா தயாரிக்க, பிரியான்ஷு சோப்ரா இதன் கிரியேடிவ் தயாரிப்பாளராக உள்ளார். மேலும், தோனி எண்டெர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை வழங்குகிறது. முதல் படைப்பு என்றாலும் சரியான திட்டமிட்டலுடன் நேர்த்தியான படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்டு, குறித்த காலத்தில் படம் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்புக் குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:"சார்பட்டா-2" - நடிகர் ஆர்யா கொடுத்த அப்டேட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.