ETV Bharat / entertainment

'Keep Calm and Avoid The Battle' - லியோ படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியானது! - லியோ அப்டேட்

Leo Telugu Poster released: லியோ படத்தின் தெலுங்கு போஸ்டர் இன்று வெளியான நிலையில், விஜய் ரசிகர்கள் அதனைக் கொண்டாடி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2023, 8:28 PM IST

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம், ‘லியோ’. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரித்துள்ள லியோ படத்திற்கு, அனிருத் இசை அமைத்துள்ளார். கதாநாயகியாக த்ரிஷா நடித்திருக்கிறார். மேலும், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பல நட்சத்திரப் பட்டாளங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. மேலும், லோகேஷ் கனகராஜின் எல்சியு யுனிவர்சில் லியோ இணையுமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு கமல்ஹாசன் நடிப்பில் இயக்கிய விக்ரம் திரைப்படம் இமாலய வெற்றியைப் பதிவு செய்து இருந்தது.

எனவே, விக்ரம் திரைப்பட வசூலை லியோ திரைப்படம் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதன்படி லியோ பட வெளியீட்டுக்கு முன்பே ஓடிடி, சேட்டிலைட், வெளிநாட்டு உரிமம் என இதுவரை ரூ.400 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால், எப்படியும் ரூ.1,000 கோடியை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இம்மாத இறுதியில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்த நிலையில், இன்று (செப்.17) லியோ படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் காஷ்மீரில் விஜய் கேசுவலாக நடந்து வருவது போன்றும், ஓடி வருவது போன்றுமான படங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் அதில், 'Keep Calm and Avoid The Battle' என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

தெலுங்கில் வெளியாகியுள்ள இந்த போஸ்டரை, தெலுங்கு விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், இந்த போஸ்டரை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு மாஸ் காட்டி வருகின்றனர். இதனை விஜய், லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட படக்குழுவினர் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: SIIMA 2023 Award: தமிழ் பிரபலங்கள் தட்டி சென்ற சைமா விருதுகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.