சென்னை: செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம், லியோ. இந்த படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, கௌதம் மேனன், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்போதே அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
-
#Badass ma#LeoDas ma#LEO 🔥🧊 pic.twitter.com/XQpCkQJ5p2
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Badass ma#LeoDas ma#LEO 🔥🧊 pic.twitter.com/XQpCkQJ5p2
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 27, 2023#Badass ma#LeoDas ma#LEO 🔥🧊 pic.twitter.com/XQpCkQJ5p2
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 27, 2023
மாஸ்டர் படத்திற்குப் பிறகு விஜய் - லோகேஷ் கூட்டணி என்பதாலும், விக்ரம் மெகா ஹிட்டிற்குப் பிறகு லோகேஷ் இயக்கும் திரைப்படம் என்பதாலும் லியோ படத்திற்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு எகிறியது. மேலும், இந்தப் படம் லோகேஷ் கனகராஜின் LCU யுனிவர்சில் இணையுமா என ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். படம் குறித்து சஸ்பென்ஸ் காத்து வரும் இயக்குநர் லோகேஷ், படத்தின் அப்டேட்டை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார்.
இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்கள் பிறந்தநாளுக்கு ஆரம்பம் முதல் ஸ்பெஷல் வீடியோக்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. நடிகர்கள் சஞ்சய் தத், அர்ஜூன் ஆகியோருக்கு கதாபாத்திர வீடியோ வெளியான நிலையில், விஜய் பிறந்தநாளுக்கு லியோ படத்தின் முதல் சிங்கிள் ‘Naa Ready' பாடலை படக்குழு வெளியிட்டது.
இந்நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெறும் என கூறப்பட்டது. லியோ படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் விஜய்யின் குட்டி கதைக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், நேற்று படக்குழு இசை வெளியீட்டு விழா ரத்து என்ற அறிவிப்பை வெளியிட்டது.
இந்த திடீர் அறிவிப்பு விஜய் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. லியோ இசை வெளியீட்டு விழா ரத்தானதற்கு எந்த அரசியல் காரணங்களும் இல்லை என படக்குழு கூறினாலும், கண்டிப்பாக இந்த அறிவிப்புக்கு அரசியல் காரணம் இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஆவேசமாக பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், இந்த திடீர் ரத்துக்கு திமுக அரசுதான் காரணம் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் 'badass ma, leo dass ma' பாடல் நாளை வெளியாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "விருதை கேரளாவுக்கு சமர்ப்பிக்கிறேன்" - ஆசியாவின் சிறந்த நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் நெகிழ்ச்சி!