ETV Bharat / entertainment

Leo Movie Update: லியோ 2வது சிங்கிள் வெளியீடு.. இணையத்தை கலக்கும் 'Badass ma, leo dass ma' பாடல்! - badass song

Leo second single: லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் 'badass ma, leo dass ma' வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 6:04 PM IST

சென்னை: செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜயுடன் த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் அடுத்த மாதம் 19ஆம் தேதி வெளியாகிறது.

மாஸ்டர் பட வெற்றிக்கு பிறகு லோகேஷ் விஜய் கூட்டணி என்பதால் லியோ படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும் இந்த படம் லோகேஷ் கனகராஜின் LCU யுனிவர்சில் இணையுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் லியோ படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. நடிகர் விஜய் பிறந்தநாளுக்கு லியோ படத்தின் முதல் சிங்கிள் நா ரெடி பாடல் வெளியானது.

அப்பாடலில் சில வரிகளில் மதுவை ஆதரிப்பது போல் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து பாடலில் குறிப்பிட்ட வரிகள் நீக்கப்பட்டது. பின்னர் நடிகர்கள் சஞ்சய் தத், அர்ஜூன் ஆகியோரது பிறந்தநாளுக்கு அவர்களது கதாபாத்திர போஸ்டர்களை படக்குழு வெளியிட்டனர். விஜய் ரசிகர்களால் லியோ இசை வெளியிட்டு விழா பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

மேடையில் விஜய்யின் குட்டி கதையை கேட்க வேண்டும் என ஆவலுடன் இருந்த ரசிகர்கள் மத்தியில் லியோ இசை வெளியிட்டு விழா திடீரென்று ரத்து செய்யப்பட்டது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. லியோ படத்தின் இசை வெளியிட்டு விழா ரத்தானதற்கு எந்த அரசியல் தலையிடும் இல்லை என படக்குழு கூறினாலும், நிகழ்ச்சி ரத்தானதற்கு ஆளுங்கட்சியே காரணம் என விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் பதிவிட்டு டிரெண்ட் செய்து வந்தனர்.

விரைவில் லியோ படத்தின் டிரைலரை வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கூறி வந்த நிலையில், இன்று லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் 'badass ma,leo dass ma' பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் விஜயின் கதாபாத்திரத்தை விவரிப்பதாக உள்ள இந்த பாடல் படத்தின் அறிமுக பாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வரும் விஷாலின் 'மார்க் ஆண்டனி' இன்று இந்தியில் ரிலீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.