ETV Bharat / entertainment

லியோவை இணைத்த லோகேஷ் கனகராஜ் - நெட்டிசன்களின் புலம்பல்களுக்கு பதில்! - cinema news

Leo Movie: லியோ படத்தின் டிரைய்லர் இன்று வெளியாகும் நிலையில், லோகேஷ் கனகராஜ் தனது X பக்கத்தில் ‘LEO’ என்பதை சேர்த்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 12:11 PM IST

சென்னை: தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் இளம் இயக்குநர்களில் ஒருவர், லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களை இயக்கி, தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்று உள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜ், விஜய் நடிப்பில் “லியோ” திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

இந்த படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வரும் என படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும், லியோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்பைப் பெற்று உள்ளது. தற்போது கைதி, விக்ரம் திரைப்படங்கள் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்க்குள் (LCU) இருக்கும்போது லியோ திரைப்படமும் வருமா என்ற ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். லியோ திரைப்படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது வெளிவந்து விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஈடுபட வைத்தது.

முன்னதாக, படத்தின் முதல் அப்டேட் விஜய்யின் பிறந்தநாளன்று வெளி வந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து படத்தின் மேக்கிங் வீடியோ, சஞ்சய் தத் கிளிம்ஸ் வீடியோ, அர்ஜூன் கிளிம்ஸ் வீடியோ என அடுத்தடுத்து அப்டேட்களை படக்குழு அள்ளித் தந்தது.

இதனிடையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அறிவிப்பு ஒன்று வெளியானது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்தை வைத்து புதிதாக “தலைவர் 171” படத்தை இயக்கப் போவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளி வந்தது.

“தலைவர் 171” அறிவிப்பு வெளி வருவதற்கு முன்னதாக, லோகேஷ் கனகராஜ் தனது X பக்கத்தில் #leo என்பதை வைத்திருந்தார் எனவும், தற்போது “தலைவர் 171” படத்தின் அறிவிப்பு வெளியானதால் அதை நீக்கி விட்டார் எனவும் சமூக வலைத்தளங்களில் செய்திகளும், விமர்சனங்களும் வைரலாக பரவி வந்தன. இதற்கு லோகேஷ் தரப்பில் இருந்து எந்த பதிலும் வெளிவரவில்லை.

இதனிடையே, லியோ படத்தின் டிரைய்லர் இன்று (அக்.5) வெளியாகும் என படக்குழு சார்பில் ஏற்கனவே அப்டேட் உடன் அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து நேற்று ( அக்.4) லோகேஷ் கனகராஜ் தனது X பக்கத்தில் #leo என்பதை சேர்த்து உள்ளார். மேலும், சமூக வலைத்தளங்களில் பரவி வந்த கருத்துகளுக்கும், விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார், லோகேஷ். மேலும், லியோ படம் சென்சாருக்குச் சென்று யு/ஏ என்ற சான்றிதழைப் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:லியோ படத்திற்கு யூ/ஏ சான்றிதழ்… டிரைலருக்கான ஆர்வமுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.