லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் அருள் நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் ‘லெஜண்ட்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘மொசலோ மொசலு’ பாடல் ஏற்கெனவே இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில், தற்போது அந்தப்படத்தின் இரண்டாவது பாடலான ‘வாடிவாசல்’ இன்று(மே 20) இணையத்தில் வெளியானது.
ஹாரிஸ் ஜெயராஜின் துள்ளல் இசையில், உற்சாகமாய் தன் கடை விளம்பரப்படம் போலவே ஃபுல் மேக்கப்புடன் குதூகலமாய் நடனமாடியுள்ளார், அண்ணாச்சி.
மேலும், தற்போதைய மாஸ் ஹீரோக்களுக்காக இணைநடிகர்கள் பில்டப் வசனங்கள் பேசுவது போல் இந்தப் பாடலின் தொடக்கத்திலும் ,”சீமைக்கு போன வாத்தியாரு வந்துருக்காரு டி..!, இவர் ஆடுவாரா..? இல்ல ஆட்டிவைப்பாரா..?” போன்ற எம்ஜிஆர் சாயல் பில்டப் வசனங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், நாம் என்னென்னவெல்லாம் காணவிருக்கிறோம் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்(அவ்வளவு சக்தி இருந்தால்..!).
இதையும் படிங்க: விக்ரம் 3ஆம் பாகத்தில் சூர்யா.. சஸ்பென்ஸ் உடைத்த கமல்