ETV Bharat / entertainment

இந்தாண்டு ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட குஜராத்தி திரைப்படம்! - ஆஸ்கார் அகாடமி விருதுகள்

95ஆவது ஆஸ்கர் அகாடமி விருதிற்காக இந்தியாவின் சார்பாக குஜராத்தி திரைப்படமான 'செலோ ஷோ' எனும் Last film Show திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட குஜராத்தி திரைப்படம்..!

author img

By

Published : Sep 20, 2022, 8:06 PM IST

இந்தாண்டு ஆஸ்கருக்கு இந்தியாவின் சார்பாக இயக்குநர் பான் நலின் இயக்கத்தில் உருவான குஜராத்தி திரைப்படமான 'செலோ ஷோ'(லாஸ்ட் பிலிம் ஷோ) திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 95ஆவது ஆஸ்கர் அகாடமி விருதுக்காக இந்தியா சார்பில் அனுப்பப்படவுள்ள திரைப்படத்தை அறிவிக்கும் விதமாக பத்திரிகையாளர் சந்திப்பு இன்று(செப்.20) தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பினில் இந்திய திரைப்பட சங்கத்தின் தேர்வுக்குழுவினர் பங்கு கொண்டு தேர்வு செய்த படத்தினை அறிவித்தனர். கன்னட இயக்குநர் டி.எஸ். நாகாபரணா (தலைவர்) தலைமையில் 17 பேர் கொண்ட தேர்வுக்குழுவினர் மொத்தம் 13 படங்களைப் பார்த்து ஒரு படத்தைத்தேர்வு செய்துள்ளனர்.

தமிழ் சினிமா சார்பாக இயக்குநர் சந்தானபாரதி இந்தக்குழுவில் உறுப்பினராக உள்ளார். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் போட்டிக்கு இந்தியா சார்பில் பல சிறந்த படைப்புகளில் இருந்து ஒருமனதாக 'செலோ ஷோ' (லாஸ்ட் பிலிம் ஷோ) என்ற குஜராத்தி திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் ரவி கொட்டாரக்கரா பேசுகையில், 'இந்தியா சார்பில் ஆண்டிற்கு 4000, 5000 படங்கள் எடுக்கப்படுகின்றன. மிகச்சிறந்த கதைகள், படைப்புகள் இக்காலத்தில் எடுக்கப்பட்டு வருகின்றன. 1929இல் ஆஸ்கர் விருது விழா தொடங்கப்பட்டது.

ஆனால், அப்போது வெளிநாட்டுப் படங்களை ஏற்காத நிலை இருந்தது. ஆனால், இப்போது இந்த நிலை மாறியுள்ளது. ஆஸ்கருக்கு இந்தியாவில் இருந்து தரமான படங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இப்படம் வாழ்வில் சினிமாவின் அருமையை சொல்வது மட்டுமின்றி, ஒவ்வொரு திரைப்பட ரசிகனின் உணர்வுகளை கூறும் சிறந்த படைப்பாக உருவாகியுள்ளது.

இப்படம் இந்திய மரபையும், பாரம்பரியங்களையும் நுட்பமாகவும் உண்மையாகவும் வெளிப்படுத்துகிறது, இது வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு இந்தியாவின் முகத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது' என்றார்.

தலைவர் நாகாபரணா பேசுகையில், 'இங்கு இந்த விழாவில் பங்கு கொண்டது மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. ஆஸ்கர் விருது தேர்வுக்கு 13 படங்கள் பரிந்துரைக்கப்பட்டன. பல மொழிகளில் இருந்து பல சிறந்த திரைப்படங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக குஜராத்தி திரைப்படம் 'செலோ ஷோ' (லாஸ்ட் பிலிம் ஷோ) படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

இந்தாண்டு ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட குஜராத்தி திரைப்படம்..!
இந்தாண்டு ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட குஜராத்தி திரைப்படம்!

ஆஸ்கர் நுழைவிற்காக இந்தியிலிருந்து, ’பதாய் தோ’, ‘ராக்கெட்ரி’, ‘ஜுண்ட்’ , ’பிரம்மாஸ்திரம்’ , ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, ’அனெக்’ உள்ளிட்ட ஆறு படங்கள்.

தமிழில் இருந்து, ‘இரவின் நிழல்’ , குஜராத்திலிருந்து ‘செலோ ஷோ’, தெலுங்கில் இருந்து ’ஆர்ஆர்ஆர்’ , ’ஸ்தலம்’ ஆகியப்படங்களும், மலையாளத்தில் இருந்து ’அறியப்பு’ , வங்காளத்தில் இருந்து
’அபராஜிதோ’ ஆகியப்படங்கள் இந்தாண்டுக்காக போட்டியில் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 30 ஆண்டுகளுக்குப்பின் காஷ்மீரில் சினிமா தியேட்டர் திறப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.