ETV Bharat / entertainment

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான கொட்டுக்காளி!

Kotukkaali Movie: பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக திரைப்படங்களுக்கான பிரிவில் கொட்டுக்காளி திரைப்படம் தேர்வாகியுள்ளது.

கொட்டுக்காளி
Kottukaali
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 10:51 PM IST

சென்னை: சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தி லிட்டில் வேவ் புரொடக்‌ஷன்ஸ் உடன் இணைந்து தயாரித்த படம் கொட்டுக்காளி. 'கூழாங்கல்' புகழ் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். அன்னா பென் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக அரங்கில் ப்ரீமியர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கூறும்போது, "நம்பிக்கைக்குரிய திறமைசாலிகளை ஊக்குவிக்கவும், அவர்களின் கனவுகளை நனவாக்கவும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் செயல்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக, என்னைச் சுற்றி தொழில் மீது ஆர்வம் கொண்ட திறமைசாலிகள் சரியாக அமைந்துள்ளனர்.

மொழி மற்றும் பிராந்திய தடைகளுக்கு அப்பால் அனைவரும் தொடர்புப்படுத்தக்கூடிய மனித உணர்ச்சிகளை அங்கீகரிக்கும் தனித்துவமான கதைகளை உருவாக்க எங்கள் தயாரிப்பு நிறுவனம் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளது. இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் கொடுத்திருக்கும் ஒரு அற்புதமான படைப்பை நாங்கள் தயாரித்ததில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம். பெர்லின் சர்வதேச திரைப்பட விழா என்பது உலகத் திரையுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இடம். மேலும், வரவிருக்கும் ஆண்டுகளில் நாம் மறக்க முடியாத பெருமைமிகு நினைவாகவும் இது இருக்கும்” என்றார்.

'கொட்டுக்காளி' படத்தை பி.எஸ். வினோத்ராஜ் இயக்கி இருக்க, இணைத் தயாரிப்பாளர் கலை அரசு மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்‌ஷன்ஸூடன் இணைந்து நடிகர் சிவகார்த்திகேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. பி.சக்தி வேல் ஒளிப்பதிவு, கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு, சுரேன் ஜி & எஸ். அழகிய கூத்தனின் ஒலி வடிவமைப்பு, ராகவ் ரமேஷின் ஒலி ஒத்திசைவு மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பையும் இப்படம் கொண்டுள்ளது.

மேலும், கொட்டுக்காளி திரைப்படம் 74வது சர்வதேச பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக திரைப்படங்களுக்கான பிரிவில் தேர்வாகியுள்ளதை நடிகர் சிவகார்த்திகேயன் அறிக்கை வெளியிட்டு அவரது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். அதேபோல் படக்குழுவினர் அனைவருக்கும் தனது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இளையராஜா இசையில் ‘80’ காலகட்டத்தில் உருவாகி இருக்கும் வட்டார வழக்கு; டிசம்பர் 29 ரிலீஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.