தமிழ் சினிமாவில் வாரா வாரம் ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாவது வழக்கம். கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் வெளியானதால் வேறு எந்த படங்களும் வெளியாகவில்லை. கடந்த வாரமும் அதே நிலைதான். இதனால் இந்த வாரம் ஐந்து படங்கள் வெளியாக உள்ளது.
அடியே : திட்டம் இரண்டு படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், கௌரி கிஷன் நடித்துள்ள படம் அடியே. இதுவரைக்கும் தமிழ் சினிமா சொல்லாத பேரலல் யுனிவர்ஸ் பற்றிய பேண்டஸி படமாக இது உருவாகியுள்ளது.
படத்தின் ட்ரைலரே வித்தியாசமாகவும் ரசிக்கும் படியாக இருந்தது. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹர்காரா ராம் அருண் காஸ்ட்ரோ இயக்கி நடித்துள்ள படம் ஹர்காரா. இந்தியாவின் முதல் தபால் மனிதன் பற்றிய சுவாரஸ்யமான கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் இந்தியாவில் தபால் போக்குவரத்து எப்படி இருந்தது என்பதையும் அழகாக காட்டியுள்ள படம் இது. சமீபத்தில் பத்திரிகையாளர் காட்சி போடப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த வாரம் இப்படம் வெளியாகிறது.
பாட்னர் ஆதி, ஹன்சிகா மோத்வானி , யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் பாட்னர். அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இப்படத்தை இயக்கியுள்ளார். நகைச்சுவை கலந்த கதை தான் என்கிறார் இயக்குநர். பல்வேறு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ஒரு வழியாக இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
கிங் ஆஃப் கொத்தா சீதா ராமம் படத்திற்கு பிறகு துல்கர் சல்மான் நடித்துள்ள படம் கிங் ஆஃப் கொத்தா. அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, செம்பன் வினோத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
கக்கன் நேர்மையின் சிகரமாக வாழ்ந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் வாழ்க்கை வரலாற்று படமான கக்கன், பாக்யராஜ் நடித்து கின்னஸ் சாதனை படமாக எடுக்கப்பட்டுள்ள 369 ஆகிய படங்களும் நாளை வெளியாக உள்ளன.
இதையும் படிங்க: 69வது தேசிய திரைப்பட விருதுகள் - சிறந்த நடிகர் போட்டியில் மல்லுக்கட்டும் தனுஷ், சிம்பு!