ETV Bharat / entertainment

Keerthy Suresh: பாலிவுட்டில் களமிறங்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்! - தெறி

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது முதல் முறையாக பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Keerthy
நடிகை
author img

By

Published : Jul 18, 2023, 6:00 PM IST

ஹைதராபாத்: நடிகை கீர்த்தி சுரேஷ், கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான 'இது என்ன மாயம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு, 2016ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் மற்றும் ரெமோ படத்தில் நாயகியாக நடித்தார். அதே ஆண்டு நடிகர் தனுஷ் உடன் இணைந்து 'தொடரி' படத்தில் நடித்தார். இப்படங்களில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

அதன் பின்னர், கடந்த 2018ஆம் ஆண்டு இவர் நடித்த 'நடிகையர் திலகம்' படம் வெளியானது. அதில், பழம்பெரும் நடிகை சாவித்ரியைப் போலவே தத்ரூபமாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இப்படம் கீர்த்தி சுரேஷின் சினிமா வாழ்க்கையில் முக்கிய மைல்கல்லாக மாறியது. இப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். இப்படத்திற்கு பிறகு, நடிகர் விஜயுடன் பைரவா, நடிகர் விக்ரமுடன் சாமி2, நடிகர் ரஜினிகாந்துடன் அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நடித்தார். தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்தார். ஆனால், அது பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை.

தெலுங்கில் நடிகர் நானியுடன் தசரா படத்தில் நடித்திருந்தார். கடந்த மார்ச் மாதம் வெளியான இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அதன் பிறகு, மாரிசெல்வராஜின் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்தார். அதில், நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்திருந்தார். கடந்த மாதம் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியிலும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான வெற்றிப்படமான 'தெறி' தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தில் நாயகனாக வருண் தவான் நடிக்கும் நிலையில், நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஜான்வி கபூர் நடிப்பதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆக்‌ஷன் படமாக உருவாக இருக்கும் இப்படத்தை காளீஸ் இயக்குகிறார். இப்படம் நடிகர் வருண் தவானின் 18வது படம் என்பதால், இப்படம் VD18 என்று அழைக்கப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் மூலம் நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் கால் பதிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளைப் போலவே பாலிவுட்டிலும் தனது திறமையை வெளிப்படுத்தி தடத்தைப் பதிக்க இருக்கிறார், கீர்த்தி சுரேஷ்.

இதையும் படிங்க: ப்ராஜெக்ட் கே படத்தில் தீபிகா படுகோனே லுக் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.