ETV Bharat / entertainment

’ஒரே வண்டியில் எல்லோரும் உடை மாற்றினோம்..!’ - வரலட்சுமி சரத்குமார் - வரலட்சுமி சரத்குமார்

நடிகர் வைபவ், வராலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவான ’காட்டேரி’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (ஜூலை 26) சென்னையில் நடைபெற்றது.

’ஒரே வண்டியில் எல்லோரும் உடை மாட்டினோம்..!’ - வரலட்சுமி சரத்குமார்
’ஒரே வண்டியில் எல்லோரும் உடை மாட்டினோம்..!’ - வரலட்சுமி சரத்குமார்’ஒரே வண்டியில் எல்லோரும் உடை மாட்டினோம்..!’ - வரலட்சுமி சரத்குமார்
author img

By

Published : Jul 26, 2022, 4:02 PM IST

சென்னை: ’யாமிருக்க பயமே’ பட இயக்குநர் டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காட்டேரி’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், தயாரிப்பாளர் தனஞ்செயன், ஞானவேல் ராஜா, ஆத்மிகா, இயக்குனர் டிகே, தயாரிப்பாளர் சிவி.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது இயக்குநர் டிகே, “இப்படம் தொடங்கும் போது இருந்த சிலர் இப்போது இல்லை. சிலருக்கு திருமணம் நடந்து விவாகரத்தும் செய்துவிட்டனர். இவ்வளவு தடைகளைக் கடந்து இந்தத் திரைப்படம் இப்போது வெளிவர உள்ளது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

இதையடுத்து பேசிய நடிகை வரலட்சுமி சரத்குமார், “எனக்கு காமெடி படங்களில் நடிக்க ரொம்ப பிடிக்கும். இப்படம் அதனை நிறைவேற்றியுள்ளது. இலங்கையில் படப்பிடிப்பு நடைபெற்றது. கேரவன் எல்லாம் இருக்காது. ஒரே வண்டியில் நான், ஆத்மிகா, சோனம் எல்லோரும் உடை‌ மாற்றிக்கொண்டோம். அது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது” என்றார்.

வரலட்சுமி சரத்குமார் பேட்டி

இறுதியாக நடிகர் வைபவ், “’காட்டேரி’ படம் நியாபகம் இருக்கா என்று பலர் என்னிடம் கேட்கின்றனர். ஏனென்றால் அவ்வளவு காலம் பிடித்துவிட்டது. படமும் நியாபகம் இருக்கு. கதையும் நியாபகம் இருக்கு. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு நன்றி‌. பெரிய படம் பண்றோம்னு சொன்னார். படம் ஆகஸ்ட் 5 ம் தேதி ரிலீஸ் ஆகிறது எல்லோரும் சப்போர்ட் பண்ணுங்க நன்றி" என்றார்.

இதையும் படிங்க: கமல் தயாரிப்பில் நாயகனாக நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.