ETV Bharat / entertainment

'காசே தான் கடவுளடா' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

author img

By

Published : Jan 22, 2023, 10:29 PM IST

மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் ’காசே தான் கடவுளடா’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

காசேதான் கடவுளடா ரிலீஸ் தேதி அறிவிப்பு !

சென்னை: சித்ராலயா கோபு இயக்கத்தில், முத்துராமன், ஸ்ரீகாந்த், தேங்காய் ஸ்ரீனிவாசன், மனோரமா, லக்‌ஷ்மி உள்ளிட்டோர் நடிப்பில் 1972ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'காசே தான் கடவுளடா'. இப்படத்தை தற்போது, 'சேட்டை' படத்தை இயக்கிய ஆர்.கண்ணன் ரீமேக் செய்துள்ளார். 'காசே தான் கடவுளடா' படத்தின் படப்பிடிப்பு கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி தொடங்கியது.

இப்படத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், குக் வித் கோமாளி ஷிவாங்கி, புகழ், சுப்பு பஞ்சு, தலைவாசல் விஜய், மனோ பாலா ஆகியோர் நடித்துள்ளனர். ஒரே கட்டமாக இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நிறைவடைந்தது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 10-ம் தேதி 'காசே தான் கடவுளடா' திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.