ETV Bharat / entertainment

"எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் வந்தியத்தேவனுக்கு இதைத்தான் பரிசாக அளித்திருப்பார்" - நடிகர் சத்யராஜ்! - Karthi starring 25th movie

Japan Movie Audio launch : கார்த்தி நடிப்பில் உருவான ஜப்பான் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தியின் நடிப்பை ஒருவேளை எம்ஜிஆர் பார்த்து இருந்தால், ஆயிரம் முத்தங்களை பரிசாக கொடுத்து இருப்பார் என்று தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2023, 9:10 PM IST

Updated : Oct 28, 2023, 9:25 PM IST

சென்னை: ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'ஜப்பான்' (Japan Movie). இப்படத்தில் அனு இம்மானுவேல் நாயகியாக நடித்துள்ளார். ஜீவி பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (அக். 28) சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கார்த்தி, இயக்குனர் ராஜு முருகன், லோகேஷ் கனகராஜ், எச்.வினோத், சுசீந்திரன், முத்தையா, சிறுத்தை சிவா, சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ், "நான் சென்னைக்கு வந்த பிறகு தான் கார்த்தி பிறந்தார். கார்த்தி, சூர்யா இருவரும் சினிமாவிற்கு வருவார்கள் என நினைக்கவில்லை.

கார்த்தி, சூர்யாவின் சிறு வயதில் அவர்களுக்கு ஆரஞ்சு மிட்டாய் வாங்கி கொடுக்க அழைத்துச் சென்று அவர்களுக்கு ஆரஞ்சு மிட்டாய் வாங்கி கொடுப்பேன். அப்போதுதான் அண்ணன் சிவக்குமாருக்கு தெரியாமல் தம் அடிப்பேன். பிறகு சிகரெட் வாசம் அடிக்காமல் இருக்க நானும் ஆரஞ்சு மிட்டாய் வாயில் போட்டு செல்வேன்.

நான் பெருமையாக நினைப்பது தந்தை 'பெரியார்' (Periyar Ramaswamy) கதாபாத்திரத்தில் நடித்தது தான். இந்த கதாபாத்திரம் சிவாஜி ஐயா நடிக்க ஆசைப்பட்டு நடிக்க முடியாமல் போனது. அதேபோல, எம்.ஜி.ஆர் நடிக்க ஆசைப்பட்டு நடிக்க முடியாமல் போனது, வந்தியத்தேவன் கதாபாத்திரம்.

அதில் சிறப்பாக கார்த்தி நடித்து இருந்தார். ஒருவேளை இப்போது எம்.ஜி.ஆர் இருந்து இருந்தால் கார்த்தியின் நடிப்பை பார்த்து எவ்வளவு பரிசு கொடுத்து இருப்பார் எனத் தெரியவில்லை. ஆனால், கண்டிப்பா ஆயிரம் முத்தங்கள் கொடுத்து இருப்பார். நானும் கார்த்தியும் நலன் குமாரசாமி படத்தில் நடித்து வருகிறோம்.

அப்போது கார்த்தி என்னிடம் கூறியது, "ராஜு முருகன் அற்புதமான கமர்சியல் சினிமாவை எடுத்து வருகிறார். ஆனால், அதற்குள் ஏழைகளுக்கான சித்தாந்தம், பொதுவுடமைக்கான சித்தாந்தம், சமூக நீதி சித்தாந்தம் என அனைத்தையும் வைத்துள்ளார்' என்றார், கார்த்தியின் வெற்றியை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்" என்று நடிகர் சத்தியராஜ் கூறினார்.

ஜப்பான் திரைப்படம் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இது கார்த்தியின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை படிங்க: மெழுகு டாலு பிரியங்கா மோகனின் மெய் சிலிர்க்க வைக்கும் க்ளிக்ஸ்..!

Last Updated : Oct 28, 2023, 9:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.