சென்னை: பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. இதில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றது. சென்னையில் ஒரு வருடம் ஓடியது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார்.
லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சந்திரமுகி வேடத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனென்றால் சந்திரமுகியாக நடித்த ஜோதிகா நடிப்பில் மிரட்டி இருந்தார். இதனால் அனைவருக்கும் சந்திரமுகியாக யார் நடிக்கிறார்கள் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.
தற்போது அந்த வேடத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இவருக்கு பல கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் கங்கனா நடிப்பதாக இயக்குனர் வாசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'இந்தியன் 2' படப்பிடிப்பு எப்போது?: லேட்டஸ்ட் அப்டேட்!