ETV Bharat / entertainment

ரசிகர்களுக்கு 'சர்ப்ரைஸ்' தந்த கமல்..!

author img

By

Published : May 24, 2022, 5:48 PM IST

நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளிவரவிருக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் புரொமோஷனாக ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தந்த கமலின் வீடியோ தற்போது ராஜ் கமல் ஃபிலிம்ஸின் அதிகாரப்பூர்வ யூ-ட்யூப் சேனலில் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

ரசிகர்களுக்கு ’சர்ப்ரைஸ்’ தந்த கமல்..!
ரசிகர்களுக்கு ’சர்ப்ரைஸ்’ தந்த கமல்..!

நடிகர் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடித்திருக்கும் படம் ‘விக்ரம்’. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். வருகிற ஜூன் 3 அன்று இப்படம் உலகெங்கும் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் புரொமோஷனாக குறிப்பிட்ட சில ரசிகர்களிடம் சப்ரைஸாகத் தோன்றினார், கமல்ஹாசன். தன் நாயகனை முதன்முதலாக கண்ட ரசிகர்கள் கண்ணீருடன் கமல்ஹாசனை ஆரத்தழுவி அணைக்கும் நெகிழ்ச்சி காணொலி ராஜ்கமல் ஃபிலிம்ஸ் யூ-ட்யூப் சேனலில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

ஏற்கெனவே வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியிலும், சமூக வலைதளத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இந்தாண்டில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாக ‘விக்ரம்’ திகழ்வது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சூர்யா - சிறுத்தை சிவா இணையும் 'பீரியட் படம்'!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.