ETV Bharat / entertainment

67 வயதில் அசால்ட் சம்பவம்.. பிளாஷ் பேக் சென்ற கமல் ரசிகர்கள்... - கமல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் , பஹத் பாசில் , விஜய் சேதுபதி நடித்துள்ள விக்ரம் திரைப்படத்தில் இருந்து பத்தல பத்தல பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடல் ராஜா கைய வச்சா, காசு மேல அட காசு வந்து , ஆழ்வார் பேட்ட ஆண்டவா பாடல்களை போல சென்னை ஸ்லாங்கில் இருப்பதால் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது

kamal
kamal
author img

By

Published : May 11, 2022, 9:55 PM IST

அனிருத் இசையில் உருவான இப்பாடலை இன்றைய டிரெண்டிற்கு ஏற்றார் போல் கமலஹாசன் எழுதி , பாடியுள்ளார். இப்பாடல் தங்களை பழைய நினைவுகளுக்கு அழைத்து செல்வதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம் பெற்ற அண்ணாத்த ஆடுறார் பாடல் அளவிற்கு கமல்ஹாசன் இறங்கி குத்தாட்டம் போட்டிருப்பது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளது.

காதலா காதலா படத்தில் இருந்து ”காசு மேல அட காசு வந்து“ , வசூல் ராஜாவில் இருந்து ”ஆழ்வார்பேட்டை ஆண்டவா” , பம்மல் கே.சம்பந்தமிலிருந்து ”கந்தசாமி மாடசாமி” ஆகிய பாடல்களை மிக்சிங் செய்து தர லோக்கலாக கமலஹாசன் சென்னை ஸ்லாங்கில் லிரிக்ஸ் எழுதி இருப்பது போல் தெரிகிறது. 67 வயதிலும் அசால்ட்டாக கமலஹாசன் குத்தாட்டம் போட்டு பலரை வியக்க வைத்து இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல் ரசிகர்கள் இப்படி ஒரு குத்தாட்டத்தை கண்டுள்ளதால் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: 'ஒன்றியத்தின் தப்பால்லே..., ஒன்னுமில்லே இப்பால்லே...!' - அரசியல் பாட்டுப்பாடிய ஆண்டவர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.