சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படமாக வலம்வரும் ‘விக்ரம்’ திரைப்படத்தைத் தனக்கு தந்தமைக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு கமல்ஹாசன் கார் ஒன்றைப் பரிசளித்துள்ளார்.
’லெக்சஸ்’ எனும் ஜப்பானிய ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனத்தின் 'Lexus ES 300 h' எனும் ஆடம்பர கார் ரகமான இந்தக் காரின் விலை ரூ.65.60 லட்சமாம். பல்வேறு வசதிகளைக் கொண்ட இந்தக் கார், பல்வேறு வண்ணங்களில் கிடைக்கும். அதில் லோகேஷுக்கு கறுப்பு வண்ணக் காரை கமல்ஹாசன் பரிசளித்துள்ளார்.
தன் ஆஸ்தான குருவான கமலிடம் விருது வாங்கியபோதே துள்ளிக்குதித்து பூரித்துப் போன லோகேஷுக்கு அவரிடமிருந்தே கிடைத்த இந்தப் பரிசு நிச்சயம் பெரும் மகிழ்ச்சியைத் தந்திருக்கும். இந்தக் காருடன் சேர்ந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
-
Thank you so much Aandavarey @ikamalhaasan 🙏🏻 ❤️❤️❤️ pic.twitter.com/h2qZjWKApm
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thank you so much Aandavarey @ikamalhaasan 🙏🏻 ❤️❤️❤️ pic.twitter.com/h2qZjWKApm
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 7, 2022Thank you so much Aandavarey @ikamalhaasan 🙏🏻 ❤️❤️❤️ pic.twitter.com/h2qZjWKApm
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 7, 2022
அந்தப் பதிவில், “ மிக்க நன்றி ஆண்டவரே..!” எனக் குறிப்பிட்டுள்ளார்.