ETV Bharat / entertainment

'பத்தல பத்தல' பாடல் வீடியோ வைரல் - திருமூர்த்தியை நேரில் அழைத்து வாழ்த்திய கமல்ஹாசன்! - நடிகர் கமல்ஹாசன் நேரில் வரவழைத்து பாராட்டு

பார்வைத் திறன் இல்லாத மாற்றுத்திறனாளியான திருமூர்த்தி 'பத்தல பத்தல' பாடலை பாடிய வீடியோ வைரலானதையடுத்து, நடிகர் கமல்ஹாசன் அவரை நேரில் வரவழைத்துப் பாராட்டுத் தெரிவித்தார்.

Kamal
Kamal
author img

By

Published : Jun 22, 2022, 9:56 PM IST

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் உலகெங்கும் வெற்றி நடைபோட்டு வருகிறது. கமல்ஹாசனே எழுதி பாடிய 'பத்தல பத்தல' பாடல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், பார்வைத் திறன் இல்லாத மாற்றுத்திறனாளியான திருமூர்த்தி, இந்தப் பாடலைப் பாடி இணையத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

திருமூர்த்தியை நேரில் அழைத்து வாழ்த்திய கமல்

இதையடுத்து இன்று திருமூர்த்தியை கமல்ஹாசன் நேரில் வரவழைத்துப் பாராட்டினார். திருமூர்த்தியின் விருப்பம் இசைக்கலைஞர் ஆக வேண்டும் என்பதைப் புரிந்து கொண்ட கமல்ஹாசன், அதற்கு உரிய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று திருமூர்த்திக்கு ஆலோசனை வழங்கினார்.

அதோடு நின்று விடாமல், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசினார். திருமூர்த்தியை தனது KM Music Conservatory இசைப்பள்ளியில் சேர்த்துக்கொள்வதாக ரஹ்மான் உறுதியளித்துள்ளார். திருமூர்த்தி இசை கற்றுக்கொள்வதற்கான முழுச்செலவையும் தானே ஏற்றுக்கொள்கிறேன் என கமல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'விஜய்யை சந்தித்து கதை சொன்னேன்..!' - நடிகர் ஆர்.ஜே.பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.