நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இப்படம் கமல்ஹாசன் திரைவாழ்விலேயே மிகப்பெரிய வசூல் செய்த படமென கூறப்படுகிறது.
இந்நிலையில், இத்தகைய வெற்றி படத்தை தந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு கார் ஒன்றைப் பரிசளித்துள்ளார், கமல்ஹாசன். இந்தப் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில், கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் லோகேஷ் கனகராஜ் மீண்டும் படம் இயக்கவுள்ளார் எனத் திரையுலக வட்டாரங்களில் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இதையும் படிங்க: நான் நடித்திருக்க வேண்டிய படம் ‘டான்’ - டான் வெற்றி விழாவில் உதயநிதி பேச்சு