ETV Bharat / entertainment

"ஜஸ்ட் லுக்கிங் லைக் எ வாவ்" - அதிதி ராவ் - சித்தார்த் ரகசியம் என்ன? - கதிஜா ரஹ்மான்

Just looking like a wow: நடிகை அதிதி ராவ் ஹைதரி, நடிகர் சித்தார்த் குறித்து ஹாட்ஸ்டார் வெளியிட்ட வீடியோவை பகிர்ந்து, அதில் "ஜஸ்ட் லுக்கிங் லைக் எ வாவ் (Just looking like a wow)" என்று குறிப்பிட்டு இருந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைராலாகி வருகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 4:35 PM IST

ஹைதராபாத்: பிரபல திரைப்பட நடிகை அதிதி ராவ் ஹைதரியும், நடிகர் சித்தார்த்தும் ஒருவருக்கோருவர் காதலித்து வருவதாக ரசிகர்கள் தரப்பில் வதந்திகள் பகிரப்பட்டு வருவது வழக்கம். குறிப்பாக அவர்கள் இருவரும் இணைந்து சமூக வலைத்தளங்களில் பதிவிடும் பதிவுகளில், அவர்களுக்கு மத்தியில் இருக்கும் கெமிஸ்ட்ரி ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் இருக்கும்.

அதனால் தான் என்னவோ இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் காதலிப்பதாக, ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்கின்றனர். இருப்பினும் இவர்களுக்கு மத்தியில் இருக்கும் உறவை குறித்து, இவர்கள் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வரவில்லை.

இதனிடையே, நாளை (நவ. 28) ஹாட்ஸ்டாரில் (Hotstar) வெளியாக ஒளிபரப்பாக இருக்கும் சித்தார்த் நடித்த 'சித்தா' படத்தின் புரமோஷனுக்காக, சித்தார்த்தின் மற்ற படங்களில் இருந்து சிறந்த காட்சிகளைத் தொகுத்து ரீல்ஸாச ஹாடஸ்டார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தது.

அதை குறிப்பிட்டு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அதிதி ராவ் ஹைதரி, "ஜஸ்ட் லுக்கிங் லைக் எ வாவ் (Just looking like a wow)" என்கிற டிரெண்டிங்கான சொல்லை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். அந்த பதிவிற்கு ரசிகர்கள் தங்களது லைக்குகளை அதிகம் பகிர்ந்து, அவர்களுக்கு மத்தியில் இருக்கும் கெமிஸ்ட்ரியை ரசிக்கும் வகையில் கமெண்டுகளையும் பதிவிட்டு இருந்தனர்.

முன்னதாக, நடிகர் சித்தார்த், அதிதி ராவின் பிறந்தநாளுக்கு கவிதையாக வாழ்த்து கூறியது, ரசிகர்கள் அவர்களைக் குறித்த வதந்திகளை அதிக அளவில் பகிர காரணமாக இருந்தது. மேலும், அதிதி ராவ் நடித்த, "ஜூப்லீ (Jubilee)" என்கிற இணையத் தொடரின் வெளியீட்டு விழாவிற்கு, இருவரும் சேர்ந்து வந்ததும் அவர்களை சுற்றி வரும் வதந்திகளை வலுவடையச் செய்தது.

மேலும் நடிகர் சித்தார்த், இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் வெளியான 'சித்தா' படத்தின் சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து, இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள 'இந்தியன் 2' படத்திலும் ஒரு கதாபாத்திரம் நடித்துள்ளார்.

மேலும், நடிகை அதிதி ராவ் ஹைதரி, சஞ்சய் லீலா பன்சாலி (Sanjay Leela Bhansali) இயக்கத்தில் உருவாக இருக்கும் 'ஹீராமண்டி' (Heeramandi) எனும் தொடரில் நடிக்க உள்ளார். குறிப்பாக, இளம் இயக்குநர் காஜிரி பாபர் (Kajri Babbar) இயக்கும் லியோனெஸ் (Lioness) படத்திலும் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மான் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய் வர்மா - தமன்னா திருமணம் எப்போது? - ரகசியம் உடைத்த தமன்னா? மறுக்கும் விஜய் வர்மா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.