சென்னை: 24 ஆண்டு கால சினிமா பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளார் மலையாள நட்சத்திரம் ஜோஜு ஜார்ஜ். அவரது சினிமா வாழ்க்கையில் "ஜோசப்" திரைப்படம் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி இருந்தார். இந்த படம் அவருக்கும் நல்ல பெயரை பெற்று தந்தது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
மேலும் "பொரிஞ்சு மரியம் ஜோஸ்" படம் அவரை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக உருவாக்கியது. "ஜோசப்" படம் தேசிய விருது குழுவின் சிறப்பு ஜூரி குழுவினரிடம் பாராட்டுகளை பெற்றது. மேலும் அவரது நடிப்பில் வெளியான "சோழா" வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா - ஒரிசான்டி போட்டி, ஜெனிவா சர்வதேச திரைப்பட விழா - சர்வதேச சிறப்புப் போட்டி மற்றும் டோக்கியோ ஃபிலிமெக்ஸ் - சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட முக்கிய திரைப்பட விழாக்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
ஜோஜு ஜார் தனது சினிமா பயணத்தில், "ஹலால் லவ் ஸ்டோரி," "ராமண்டே எடந்தோட்டம்," "லுக்கா சுப்பி," மற்றும் "துரைமுகம்" போன்ற வெற்றிகளின் மூலம் மலையாள சினிமாவில் தனக்கான தனி இடத்தை பெற்றார். மேலும் "ஜூன்", "ஆக்ஷன் ஹீரோ பிஜு" போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்கில் நடித்தும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.
நடிகராக வெற்றி பெற்ற ஜோஜு ஜார்ஜ் இம்முறை இயக்குநராக மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார். ஜோஜு ஜார்ஜ் எழுதி, இயக்கியுள்ள முதல் படம் 'பனி'. இப்படத்தின் மோஷன் போஸ்டர் ஜோஜுவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். திருச்சூர் நகரத்தில் நடக்கும் இரண்டு கேங்ஸ்டர்களின் கதை தான் பனி திரைப்படததின் கதை.
ஜோஜு ஜார்ஜ் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மார்க் ஆண்டனி படத்தின் நாயகி அபிநயா இந்தப் படத்திலும் நடிக்கிறார். இப்படத்தை அப்பு பாத்து பப்பு புரொடக்ஷன்ஸ் மற்றும் ஏடி ஸ்டுடியோஸ் ஆகியவற்றின் கீழ் எம் ரியாஸ் ஆதம் மற்றும் சிஜோ வட்கான் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
சீமா, சாந்தினி ஸ்ரீதரன், அபயா ஹிரண்மயி, சோனா மரியா ஆபிரகாம், மெர்லட் ஆன் தாமஸ், லங்கா லட்சுமி, சாரா ரோஸ் ஜோசப், பாபு நம்பூதிரி, பிரசாந்த் அலெக்சண்டர், உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவை பிரபல இயக்குநர் வேணுவும், படத்தொகுப்பை மனு ஆண்டனியும், இசை விஷ்ணு விஜயா கையாள்கின்றனர்.
இதையும் படிங்க: ராஷ்மிகா மந்தனாவின் அடுத்த படம் தி கேர்ள்ஃபிரண்ட்!