ETV Bharat / entertainment

பிரபல மலையாள நடிகருடன் கைகோர்க்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! - tamil cinema news

ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள புலிமடா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 12, 2023, 4:19 PM IST

சென்னை: பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘புலிமடா’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மலையாளத்தில் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ஏ.கே.சஜன், புலிமடா படத்தின் இயக்குநராகவும் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

ஐன்ஸ்டீன் மீடியா மற்றும் லேண்ட் சினிமாஸ் பேனரில் ஐன்ஸ்டீன் சேக் பால் மற்றும் ராஜேஷ் தாமோதரன் ஆகியோர் இந்த படத்தை தயாரித்து உள்ளனர். முன்னதாக இயக்குனர் ஜோஷி இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் நடித்த ஆண்டனி படத்தையும் ஐன்ஸ்டீன் மீடியா நிறுவனம் தயாரித்திருந்தது.

பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ‘இரட்டா’ படத்திற்குப் பிறகு ஜோஜு ஜார்ஜ் நடிக்கும் அடுத்த படமான ‘புலிமடா’ படத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், பத்து வருட இடைவெளிக்குப் பிறகு பிரபல ஒளிப்பதிவாளர் வேணு படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் புலிமடா படம் 60 நாட்களில் ஒரே ஷெட்யூலில் படமாக்கப்பட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை கொண்ட மிகப்பெரிய பட்ஜெட் படம் ஆகும்.

தமிழில் சூப்பர் ஹிட்டான ஜெய் பீம் படத்திற்கு பிறகு புலிமடா படத்திலும் லிஜோமோல் ஜோஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் செம்பன் வினோத், ஜானி ஆண்டனி, ஜாபர் இடுக்கி, ஜியோ பேபி, அபு சலீம், சோனா நாயர், கிருஷ்ண பிரபா, பாலி வில்சன், ஷிபிலா, பாலச்சந்திர மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

போலீஸ் கான்ஸ்டபிள் வின்சென்ட் ஸ்காரியாவின் (ஜோஜு ஜார்ஜ்) திருமணமும், அது தொடர்பான நிகழ்வுகளும், அவரது குணாதிசயத்திலும், வாழ்க்கையிலும் ஏற்படும் மாற்றங்களும் புலிமடா மூலம் பார்வையாளர்களுக்கு காட்சிபடுத்தப்படுகிறது. புலம் பெயர்ந்த விவசாயி ஜோஜு மற்றும் வெளிநாட்டில் வளர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருக்கும் இடையே நடக்கும் கதைதான் புலிமடா.

மேலும் இப்படம் டார்க் காமெடி வகையில் உருவாகியுள்ளது இப்படத்திற்கு இஷான் தேவ் இசையமைத்துள்ளார். மேலும் பின்னணி இசையமைப்பாளராக அனில் ஜான்சன் பணிபுரிகிறார். இப்படத்திற்கு ரபிக் அகமது, தாரா ஜெயசங்கர், மைக்கேல் பனச்சிகல் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். ஐஷ்வர்யா ராஜேஷ் நடித்த ஃபர்ஹானா திரைப்படம் சில மாதங்களுக்கு முன் ஓடிடியில் வெளியாகி பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வெளியானது ‘புலிமடா’ படத்தின் டைட்டில் போஸ்டர்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.