ETV Bharat / entertainment

போலீசாக கீர்த்தி சுரேஷ்.. ஜெயில் கைதியாக ஜெயம் ரவி.. சஸ்பென்ஸ் நிறைந்த 'சைரன்' படத்தின் டீஸர்! - கீர்த்தி சுரேஷ்

Jayam Ravi Siren movie teaser: ஹோம் மூவி மெக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'சைரன்' படத்தின் டீசர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

ஜெயம் ரவி நடிக்கும் சைரன் படத்தின் டீஸர் வெளியீடு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2023, 10:30 PM IST

சென்னை: தமிழ் திரையுலகில் தனித்துவமான மற்றும் ரசனைமிக்க படங்கள் மூலம், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் நடிகர் ஜெயம் ரவி. முன்னதாக இவர் நடித்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களில் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

மேலும், நடிகர் ஜெயம் ரவி முதல் முறையாக 'சைரன்' படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்திருக்கிறார். முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம், நடிகர் ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு, முதிர்ந்த தோற்றத்தில் கைதியாக ஜெயம் ரவி இருப்பதை போன்ற ஃபரஸ்ட் லுக் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது. அது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இந்நிலையில், 'சைரன்' படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. அதில் ஜெயிலில் கைதியாக இருக்கும் ஜெயம் ரவி குரலில் கூறப்படும் ஒரு கதையும், அதற்கு இணையாக கீர்த்தி சுரேஷ் குரலில் மற்றொரு கதையும் என இரண்டு கதாபாத்திரங்களின் கூறும் கதைகள் படத்தின் மையக்கதையை விவரிப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது.

பரபரப்பான திருப்பங்களுடன், அதிரடி அக்ஷன் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ ஆகிய படங்களில் எழுத்து துறையில் பங்களித்த ஆண்டனி பாக்யராஜ் 'சைரன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.

ஹோம் மூவி மெக்கர்ஸ் (Home Movie Makers) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் 'சைரன்' படத்திற்கு, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். முன்னணி படத்தொகுப்பாளர் ரூபன் படத்தின் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.

மேலும், இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு, சமுத்திரக்கனி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தற்போது 'சைரன்' படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் டீசரின் இறுதியில் படம் இந்தாண்டு டிசம்பர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இறைவன், அகிலன் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்ட நிலையில், 'சைரன்' படம் வெற்றிப்படமாக அமையும் ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தல தீபாவளி கொண்டாடிய சினிமா பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.