ETV Bharat / entertainment

ஜவான் படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

author img

By

Published : Aug 12, 2023, 7:10 PM IST

Updated : Aug 13, 2023, 10:03 AM IST

ஜவான் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ’சலே’ அடுத்த வாரம் ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

ஹைதராபாத்: ரெட் சில்லீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தை ரிலீஸுக்கு முன்பு மூன்று மாதம் புரமோஷன் செய்யும் பணியில் இறங்கியுள்ளது. இந்த புரமோஷனின் தொடக்கமாக ஜவான் திரைப்படத்தின் ப்ரிவீயூ கடந்த ஜூலை 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

அதன் பின்னர் ஜவான் படத்தின் முதல் சிங்கிள் ’சிந்தா பந்தா’ பாடல் ஜூலை 31ஆம் தேதி வெளியானது. குத்து பாடலான ’சிந்தா பந்தா’ ரசிகர்களிடம் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் இரண்டாவது சிங்கிள் அடுத்த வாரம் வெளியாக உள்ளது.

இது தொடர்பாக கிடைத்த தகவலின்படி ஷாருக்கான் இரண்டாவது பாடலான ’சலே’ என்ற மெலோடி பாடலை வெளியிட உள்ளார். இந்த பாடலில் ஷாருக்கானுடன், நடிகை நயன்தாராவும் சேர்ந்து நடனமாடியுள்ளார் என கூறப்படுகிறது. மேலும், இந்தப் பாடலை பிரபல இந்தி பாடகர் அர்ஜித் சிங் பாட உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஷாருக்கான் படத்தில் அர்ஜித் சிங் பாடிய பல பாடல்கள் ரசிகர்களிடம் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அர்ஜித் சிங்குடன் இணைந்து ஷில்பா ராவ் ‘சலே’ பாடலை பாடியுள்ளார். சலே பாடலுக்கு ஃபரே கான் நடன வடிவமைப்பு செய்துள்ளார். சலே பாடல் வருகிற திங்கள் (ஆகஸ்ட் 14) அல்லது செவ்வாய் அன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜவான் பட வெளியீட்டுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், ஜவான் படத்தின் புரமோஷன் வேகமெடுத்துள்ளது. ஜவான் படத்தில் அதிக கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், ஆக்‌ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

தீபிகா படுகோன் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி, ப்ரியாமணி, சன்யா மல்ஹோத்ரா, சுனில் க்ரோவர், யோகி பாபு, ரித்தி டோக்ரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஷாருக்கான் நடித்து கடைசியாக வெளியான பதான் திரைப்படம் மாபெரும் வசூல் செய்த நிலையில் ஜவான் திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என படக்குழு நம்பிக்கையில் உள்ளது.

இதையும் படிங்க: இரண்டு நிமிடத்தில் நாயகன் எடுத்த முடிவால் குடும்பம் படும் பாதிப்பே ’நூடுல்ஸ்’ - இயக்குநராக அறிமுகமாகும் அருவி மதன்!

Last Updated : Aug 13, 2023, 10:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.