நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. இப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகளவில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. நெல்சன், கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்கள் மூலம் தமிழில் வெற்றி இயக்குநராக வலம் வருகிறார். இவரது படங்களில் இருக்கும் டார்க் காமெடிகள் மிகவும் ரசிக்கும் படியாக இருக்கும்.
இவர் இயக்கிய ‘பீஸ்ட்’ திரைப்படம் சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளானது. பீஸ்ட் திரைப்படம் விமர்சனத்துக்கு உள்ளான பட்சத்திலும் நெல்சனுக்கு மீண்டும் தமிழ் திரைத்துறையின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த்தை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. நெல்சன் ரஜினிகாந்த்தை வைத்து 'ஜெயிலர்' படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். மேலும் ரஜினிகாந்த், தமன்னா, சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள 'ஜெயிலர்' படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அதிக பொருட்செலவில் தயாராகும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சென்னை, நெய்வேலி, ஹைதராபாத், கொச்சின் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் மாபெரும் பொருட்செலவில் நடைபெற்று முடிந்துள்ளது.
ஆக்சன் கலந்த படமாக உருவாகும் இந்த ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் 'முத்துவேல் பாண்டியன்' என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அடுத்த மாதம் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் படத்தின் அடுத்த அப்டேட் வருமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் ஜெயிலர் படத்தின் அடுத்த அப்டேட் ஜூலை 3ஆம் தேதி மாலை 6 மணிக்குச் சொல்கிறோம் என்று படக்குழு வழக்கம் போல் வித்தியாசமான காணொளி மூலம் அறிவித்துள்ளது. அதில் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி, அதுக்கான ப்ரோமோவும் ரெடி, ப்ரோமோவுக்கு ப்ரோமோவும் ரெடி என்று படக்குழு சார்பில் சன் பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அனிருத் வீடியோ கேம் விளையாடிக்கொண்டு இருக்கிறார். அப்போது நெல்சனிடம் இருந்து போன் வருகிறது. அதனை கட் செய்யும் அனிருத், 'எத்தனை தடவை தான் கட் செய்வது. போன் எடுத்தால் ப்ரோமோ ரெடியா என்று கேட்பார். அதை நாளைக்கு பார்த்துக்கலாம்’ என்று அனிருத் சொல்வார். இப்படி ரகளையான வீடியோ வெளியிட்டு படத்துக்கான எதிர்பார்ப்பைப் படக்குழு அதிகரித்தது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இந்நிலையில், இன்று (ஜூலை 03) மாலை ஜெயிலர் படட்தின் பர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ‘காவாலா’ என தொடங்கும் பாடல் உருவாகும் விதத்தை நெல்சன் மற்றும் அனிரூத் ஆகியோர் தங்களது நையாண்டியான நடிப்பின் மூலம் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
அதன்படி இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ஜூலை 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'காவாலா' என்ற இந்த பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். அப்டேட் எப்போ என கேட்டு வந்த ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் அமைந்த இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதையும் படிங்க: Jailer: 'தியேட்டரில் சந்திப்போம்'..ஜெயிலர் படப்பிடிப்பை நிறைவு செய்த உற்சாகத்தில் படக்குழு..!