ETV Bharat / entertainment

சூப்பர் ஹீரோவாக அவதாரமெடுக்கும் நடிகர் ஜெய்! - சூப்பர் ஹீரோ திரைப்படம்

நடிகர் ஜெய் தற்போது ஓர் சூப்பர் ஹீரோ படத்தில் நடித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஹீரோவாக அவதாரமெடுக்கும் நடிகர் ஜெய்!

author img

By

Published : Nov 15, 2022, 5:20 PM IST

Updated : Nov 15, 2022, 5:38 PM IST

தமிழ் சினிமாவில் தனி கதாநாயகன், இன்னொரு கதாநாயகனுடன் சேர்ந்து நடிப்பது, பல நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடிப்பது எனப் பல படங்களில் பார்த்து ரசித்த நடிகர் ஜெய் கூடிய விரைவில் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

ராகுல் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் சார்பாக தயாரிப்பாளர் கே.திருக்கடல் உதயம் படத்தைத் தயாரிக்க, சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் திரைப்படம் தான் ‘BREAKING NEWS’ . இந்தப் படத்தில் நடிகர் ஜெய் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நடிகர் ஜெய் ரோபோக்களுடன் சண்டையிடும் ஆக்‌ஷன் காட்சிகள் மிக பிரம்மாண்டாகவும் அற்புதமாகவும் படமாக்கி உள்ளனர்.

படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளன. படத்தின் கதாநாயகியாக தெலுங்கின் பானு ஸ்ரீ நடிக்கிறார். ராகுல் தேவ், தேவ் கில் வில்லன்களாகவும் சிநேகன் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். மேலும், பழ கருப்பையா, இந்திரஜா, ஜெய் பிரகாஷ், சந்தானபாரதி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆண்ட்ரூ பாண்டியன் இயக்குகிறார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

இதையும் படிங்க: ஐசரி கணேஷ் தயாரிக்கும் புதிய படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி!

Last Updated : Nov 15, 2022, 5:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.