'இன்ஸ்டாகிராமின் பிளேபாய்' என்று செல்லமாக அழைப்படுபவர் டேன் பில்ஸெரியன்(41). அமெரிக்காவைச் சேர்ந்த இவர் எப்போதும் பெண் தோழிகள், நடிகைகள், மாடல் அழகிகளுடன் சுற்றித்திரியும் வீடியோக்களையும், அவர்களுடன் ஆட்டம் போடும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவரை, இன்ஸ்டாகிராமில் 33 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இவர் எதைப் பகிர்ந்தாலும், அதற்கு ஆயிரக்கணக்கானோர் லைக்குகளையும், கமென்ட்டுகளையும் அள்ளி வீசுகின்றனர்.
இணையவாசிகளால் 'பிளேபாய்' என்று அழைக்கப்படும் டேன் பில்ஸெரியன், தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் டேன் பில்ஸெரியன், ஒரு பெண்மணியுடன் கைகோர்த்து நடந்து வருகிறார்.
கையில் பூச்செண்டு, கோட் சூட், சுற்றிலும் மலர் அலங்காரம் என அந்த புகைப்படமே மணக்கோலத்தில் இருக்கிறது. மேலும், "இறுதியாக நான் அதை செய்தேன்" என்று தலைப்பிட்டு புகைப்படத்தை டேன் பகிர்ந்துள்ளார். இதனால் பிளேபாயான டேன் பில்ஸெரியனுக்கு ஒரு வழியாக திருமணம் ஆகிவிட்டது என நெட்டிசன்கள் உற்சாகத்தில் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: வெளியானது ’பிளாக் பாந்தர் : வக்கண்டா ஃபாரவர்’ டீசர்