ETV Bharat / entertainment

மீண்டும் தொடங்கியது ’இந்தியன் 2’ படப்பிடிப்பு - shankar in indian 2

கமல்ஹாசன் நடிக்கும் ’இந்தியன் 2’ படப்பிடிப்பு சென்னையில் இன்று மீண்டும் தொடங்கியது.

மீண்டும் தொடங்கியது ’இந்தியன் 2’ படப்பிடிப்பு

author img

By

Published : Aug 24, 2022, 10:10 AM IST

Updated : Aug 24, 2022, 1:18 PM IST

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. இப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்பின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கரோனா, படத்தின் பட்ஜெட் தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டது.

மீண்டும் தொடங்கியது ’இந்தியன் 2’ படப்பிடிப்பு
மீண்டும் தொடங்கியது ’இந்தியன் 2’ படப்பிடிப்பு

இதனால் இயக்குனர் ஷங்கர் நடிகர் ராம் சரணை ஹீரோவாக வைத்து புதிய படத்தை தொடங்கி படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்தார். தற்போது ‘இந்தியன் 2’ படத்தின் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே லைகா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் ‘இந்தியன் 2’ படத்தை தயாரித்து வந்த நிலையில், தற்போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இப்படத்தின் தயாரிப்பில் கைகோர்த்துள்ளது.

இந்நிலையில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று சென்னையில் மீண்டும் தொடங்கவுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் படத்தின் புதிய போஸ்டருடன் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக இயக்குனர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளனர். நடிகர் கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுள்ளதால் அவர் படப்பிடிப்பில் செப்டம்பர் முதல் வாரம் கலந்து கொள்வார் என தெரிகிறது.

இப்படத்தில் நடித்து வந்த நடிகர்கள் நெடுமுடி வேணு, விவேக் ஆகியோர் கரோனா தொற்றால் மறைந்தனர். அவர்களுக்கு பதிலாக இருவரின் கதாபாத்திரங்களில் ஒரு கேரக்டரில் நடிகர் கார்த்திக் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

  • Good morning Indians, we are glad to announce that the remaining shoot for Indian 2 is commencing today! Need all of your support and wishes 🙏🧿 https://t.co/s1CjKSGXYM

    — Shankar Shanmugham (@shankarshanmugh) August 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: வெளியானது ரஜினியின் ஜெயிலர் பர்ஸ்ட் லுக்

Last Updated : Aug 24, 2022, 1:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.