சென்னை: 'இசைஞானி' இளையராஜாவின் 80ஆவது பிறந்த நாளை முன்னிட்டு உலகளவில் முதல் முறையாக அர்ப்பணிப்பு பாடல் ஒன்றை எழுதி, இசையமைத்து வெளியிடப்பட்டுள்ளது.
இப்பாடலுக்கு பெங்களூருவைச் சேர்ந்த பார்த்திபன் மற்றும் கார்த்திகேயன் இருவரும் இசையமைத்துள்ளனர். பார்த்திபன் அவர்கள் பாடல் எழுதி தயாரித்து வெளியிட்டுள்ளார். இயக்குநர் பாரதிராஜா வெளியிட இசையமைப்பாளர்கள் எஸ்.ஏ.ராஜ்குமார் மற்றும் தினா இருவரும் பெற்றுக்கொண்டனர்.
இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகரான பெங்களூருவைச் சார்ந்த பார்த்திபன், இசைப்பள்ளியை நடத்திவரும் இசையாசிரியர் மற்றும் பாடல் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடல் ’இசையின் இறைவன் இளையராஜா’ எனும் தலைப்பிலும் மற்றும் ’இளையராஜா anthem’ எனும் தலைப்பிலும் அனைத்து வலைதளங்களிலும் தமிழ் மற்றும் தெலுங்கில் ’இளையராஜா anthem’ எனவும் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மனக்காயங்களுக்கு இசை மருந்து போடும் மருத்துவர் இளையராஜா - அன்புமணி ராமதாஸ்