ETV Bharat / entertainment

நிறைய பேசப் போவதில்லை: ஏன் உதயநிதி ஸ்டாலின் அப்படி சொன்னார்? - latest cinema news

கட்டா குஸ்தி படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நிறைய பேசப் போவதில்லை, நான் பேசினால் உண்மைகளை சொல்லி விடுகிறேன் எனவும் அதனால் பிரச்சனை ஆகி விடுகிறது என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
author img

By

Published : Nov 20, 2022, 7:07 AM IST

சென்னை: செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் கட்டா குஸ்தி படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தெலு ங்கு நடிகர் ரவிதேஜா, உதயநிதி ஸ்டாலின், விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

விழா மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நான் நிறைய பேசப் போவதில்லை நான் பேசினால் நிறைய உண்மைகளை சொல்லி விடுகிறேன் அதனால் பிரச்சனை ஆகி விடுகிறது. விஷ்ணு எனக்கு சீனியர், நீர்ப்பறவை படத்தின் போது நான் வெறும் தயாரிப்பாளர் தான். ரிலீஸ் முன்பு தான் படத்தை காட்டுவார்கள். முன்னதாக காட்டினால் நான் ஏதாவது மாற்ற சொல்லுவேன் என்பதால் சிலர் படம் ரெடி ஆகவில்லை என சொல்வார்கள். ஆனால் விஷ்ணு நேற்று எனக்கு தைரியமாக படத்தை காட்டி விட்டார்.

என்னோட படத்தை ரிலீஸ் செய்யவே எனக்கு நேரம் இல்லை, அதனால் நீயே படத்தை வெளியிடு என விஷ்ணுவிடம் சொன்னேன். செம்பி படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் வெளியிட உள்ளோம். பிரபு சாலமன் அவர்களுக்காக இந்த படத்தை வெளியிட உள்ளோம். ஒரு சிறிய படம் என்றார்.

மேலும் இன்றைய சினிமாவில் நல்ல படங்கள் ஓடுகிறது. ஓடிடி வந்த பிறகு நிறைய இயக்குனர்கள் நிறைய தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்கிறது. அரசியலுக்காக நான் நிறைய உழைக்க வேண்டி உள்ளது. அதனால் சினிமாவை குறைக்க உள்ளேன் என்று பேசினார்.

இதையும் படிங்க: கபடி விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ''பட்டத்து அரசன்''

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.