ETV Bharat / entertainment

'எதிர் நீச்சல்' படப்பாடகர் ஹனி சிங் தனது மனைவியை விவாகரத்து செய்ததற்கு நஷ்ட ஈடாக ரூ.1 கோடி வழங்கினார் - பாடகர் ஹனி சிங்

பிரபலபாடகர் ஹனி சிங், தனது மனைவியை விவாகரத்து செய்து நஷ்டஈடாக 1 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வழங்கினார்.

பாடகர் ஹனி சிங் தனது மனைவியை விவாகரத்து செய்து ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்கினார்

author img

By

Published : Sep 9, 2022, 7:42 PM IST

டெல்லி: பஞ்சாபி பாடகரான ஹனி சிங் தன் மனைவியை விவாகரத்து செய்து அவர் கேட்ட நஷ்ட ஈடான 1 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வழங்கினார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரபல பாடகரான ஹனி சிங் எனும் ஹிர்தேஷ் சிங், தனது மனைவியான ஷாலினி தல்வாரை கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், இவரது மனைவி ஷாலினி தல்வார் கடந்த ஆண்டு டெல்லி நீதிமன்றத்தில் விவாகரத்து மனு ஒன்றை அளித்தார். அதில், தனது கணவர் ஹனி சிங் தன் மீது தொடர்ந்து வன்முறை நிகழ்த்தி வந்ததாகவும்; பிற பெண்களுடன் தொடர்பு வைத்துவருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இதனையடுத்து, தற்போது ஹனி சிங்கும் அவரது மனைவி ஷாலினியும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஷாலினி தல்வார், ஹனி சிங்கிடம் நஷ்ட ஈடாக 10 கோடி ரூபாய் கேட்டுபின், சமரச பேச்சு வார்த்தைக்குப் பின் அது 1 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

இதனையடுத்து, நேற்று(செப்.8) ஹனி சிங் தனது மனைவிக்கு நஷ்ட ஈடாக 1 கோடி ரூபாயை டெல்லி குடும்ப நீதிமன்றத்தில் வழங்கினார். பாடகர் ஹனி சிங்கும் ஷாலினி தல்வாரும் திருமணத்திற்கு முன்பு மிக நெருங்கிய நண்பர்களாக இருந்து பின், 2011ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

பாடகர் ஹனி சிங் கோலிவுட்டில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ’எதிர் நீச்சல்’ திரைப்படத்தில் அனிருத் இசையில் அவரோடு இணைந்து 'எதிர் நீச்சலடி' பாடலில் ஒரு ட்ராக் பாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாய்காட் பிடியில் சிக்கி சின்னாபின்னமான "பிரம்மாஸ்திரா"!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.