ETV Bharat / entertainment

ரீ- என்ட்ரி கொடுக்கும் கவுண்டமணி - 'பழனிச்சாமி வாத்தியார்' படம் பூஜையுடன் தொடக்கம்

author img

By

Published : Jan 20, 2023, 4:50 PM IST

காமெடி நடிகர் கவுண்டமணி நடிக்கும் 'பழனிச்சாமி வாத்தியார்' திரைப்படம் பூஜையுடன் இன்று தொடங்கியது.

Etv Bharat
Etv Bharat

காமெடி கிங் கவுண்டமணி, யோகிபாபு கூட்டணியில் நடிக்கும் 'பழனிச்சாமி வாத்தியார்' (Palanisamy vathiyar) படத்திற்கான பணிகள் பூஜையுடன் இன்று (ஜன.20) தொடங்கின. 80, 90-களில் கவுண்டமணி இருந்தாலே படம் வெற்றிதான் என்றிருந்தது.

அந்த அளவிற்கு தனக்கே உரிய பாணியில் எவ்வளவு பெரிய உச்ச நட்சத்திரத்தையும் மிகவும் யதார்த்தமான தனது பேச்சில் நகைச்சுவை செய்து கலாய்ப்பதில் இவருக்கு இணை வேறு யாருமில்லை என்று தான் சொல்ல வேண்டும். நகைச்சுவை உலகில் தமிழ் சினிமாவில் நீங்கா இடம் பிடித்த இவர் தனக்கென்று ரசிகர்களிடையே முத்திரை பதித்தவர் ஆவார்.

இன்றைக்கும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் என சோசியல் மீடியாவின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும், அதில் இவரின் வசனங்கள் அடங்கிய மீம்ஸ்களும், இவரது அசத்தலான கலாய் வசனங்களும் இடம் பெற்றிருக்கும். கடந்த 2016-ல் வெளியான 'வாய்மை' இவர் கடைசியாக நடித்த படமாகும். இதனைத்தொடர்ந்து, 6 ஆண்டுகளுக்குப் பின் தற்போது மீண்டும் 'பழனிச்சாமி வாத்தியார்' என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார், கவுண்டமணி. இந்த படத்தில், யோகிபாபுவும் முக்கிய ரோலில் நடிக்க உள்ளார். இதனால், ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் மதுரை செல்வம் பிரமாண்டமாக தயாரிக்கும் இரண்டாவது படம் "பழனிச்சாமி வாத்தியார்". அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனமிட்டு இருப்பவர், கவுண்டமணி. சமூக அக்கறைகொண்ட விஷயங்களைக்கூட போகிற போக்கில் தனது வசனத்தால், உடல்மொழியால் விதைத்து செல்லும் வித்தை கவுண்டமணிக்கு கைவந்த கலை. தமிழ் மக்களின் நகைச்சுவை விருந்தாகவும் மருந்தாகவும் எப்போதும் தனது பங்களிப்பை செய்துவரும் கவுண்டமணி இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

ரீ-என்ட்ரி கொடுக்கும் கவுண்டமணி -  'பழனிச்சாமி வாத்தியார்' படம் பூஜையுடன் தொடக்கம்

அவருடன் யோகி பாபு, கஞ்சா கருப்பு இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ராதாரவி, சித்ரா லட்சுமணன், T.சிவா, மனோபாலா, J.S.K.சதீஷ் குமார், நந்தகோபால் R.K.சுரேஷ், மதுரை டாக்டர் சரவணன், மங்கை அரிராஜன், திருச்சி சுரேந்தர், சாந்தகுமார், ஆகிய 11 தயாரிப்பாளர்களும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள். யோகா டீச்சராக சஞ்சனா சிங் நடிக்கிறார். மற்ற நடிகை, நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

wide angle ரவிசங்கர் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து வரிகளுக்கு இசையமைப்பாளர் K இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இவர் ஏற்கனவே, கவுண்டமணி நடித்த 49 ஓ படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அ.நாகராஜ் எடிட்டிங் செய்ய, கலை இயக்குநராக ராஜா பணியாற்றுகிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார், திரைப்பட கல்லூரி மாணவரான செல்வ அன்பரசன்.

இந்தப் படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது. படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது. இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதற்காக பிரபல கதாநாயகன் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: இயக்குநர் லீனா மணிமேகலையை கைது செய்யத் தடை; உச்ச நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.