ETV Bharat / entertainment

ஞான தேசிகன் டூ இளையராஜா: ரகசியம் உடைத்த இசைஞானி

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எப்படி தனக்கு 'இசைஞானி' என்ற பட்டத்தை எனக்கு கொடுத்தார் என கோவையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இளையராஜா நெகிழ்ந்து பேசினார்.

ஞான தேசிகன் to இளையராஜா, பெயரின் ரகசியம் உடைத்த இளையராஜா

author img

By

Published : Jun 3, 2022, 9:01 AM IST

Updated : Jun 3, 2022, 9:14 AM IST

கோயம்புத்தூர்: கொடிசியா மைதானத்தில் இசைஞானி இளையராஜாவின் 80 வது பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று (ஜூன்3) இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இளையராஜா பங்கேற்றார். அப்போது தான் இசையமைத்த திரைப்பட பாடல்களை பாடி இரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மேடையில் இளையராஜா பேசும் போது, தனக்கு இளையராஜா என பெயர் வருவதற்கான காரணத்தை விளக்கி கூறினார்.

அப்போது பேசிய அவர், “எனக்கு எனது அப்பா முதலில் வைத்த பெயர் ஞான தேசிகன். என்னுடைய ஜாதகத்தை பார்த்து அந்த பெயரை வைத்தார். பள்ளியில் சேர்க்கும் போது கூப்பிடுவதற்கு சுலபமாக இருக்க வேண்டுமென ராசையா என மாற்றிவிட்டனர். பின்னர் எனது விஷன் மியூசிக் மாஸ்டரிடம் போகும் பொழுது எனக்கு முதல் பாடல் சொல்லிக் கொடுத்தார்,

அப்போழுது எனது பெயர் என்ன எனக் கேட்டார், ராசையா என்றேன். ராசையா நன்றாக இல்லை. ராஜா என மாற்றிக்கொள் என்றார். சரி என்றதும் எனது பெயர் ராஜா என்றானது. பின்னர் படம் கிடைத்ததும் எந்த பெயரில் போடுவது என பஞ்சு அருணாச்சலம் கேட்டார். பாவலர் பிரதர்ஸ் என்ற பெயரில் நாங்கள் நாடு முழுக்க கச்சேரி செய்துகொண்டிருந்தோம், அதனால் பாவலர் பிரதர்ஸ்னு என்று போடலாம் என கூறினேன்.

பாவலர் பிரதர்ஸ் பழைய பெயர். அப்போ ராஜானே போட்டுகங்க என்றேன், ராஜானா ஏஎம் ராஜா இருக்கார். சரி, அவர் வேணா மூத்த ராஜாவாக இருக்கட்டும் , நீ இளைய ராஜா அவ்வளவு தான். அப்படி, என் பெயர் நான் வைத்தது இல்லை” எனத் தெரிவித்தார். இதையடுத்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனக்கு இசைஞானி என பட்டம் சூட்டியது குறித்து இளையராஜா நெகிழ்ச்சியுடன் பேசினார்.

அப்போது பேசிய அவர், “என் அப்பா எனக்கு ஞான தேசிகன் என பெயர் வைத்ததை, கலைஞர் எப்படி அந்த ஞானியை கொண்டு வந்து இசையோடு சேர்த்து இசைஞானி என பொதுமக்கள் கூடியிருந்த ஒரு கூட்டத்தில் வைத்து இவரை இசைஞானி என அழைக்கிறேன் என அப்பட்டத்தை எனக்கு கொடுத்தார். அவர் இந்த நாட்டிற்கு செய்வதை எல்லாம் எனக்கு செய்வதாக எடுத்துக் கொள்கிறேன்.

கலைஞரிடம் அவ்வளவு மரியாதை எனக்கு. ஏனென்றால் எனக்கு இசைஞானி என்ற பட்டத்தை கொடுத்தார் என்பதற்காக அல்ல. தனிப்பட்ட முறையில் தமிழக மக்களை முன்னேற்ற அவர் பட்ட பாடெல்லாம் அரசியல் வட்டாரத்தில் உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும். அதே நேரத்தில் பொது வாழ்வில் அவர் செய்த நல்ல காரியங்கள் தெரியும். அவர் வழியில் செல்லும் நமது முதல்வரும் நீண்ட நாள் அவரது கனவை நிறைவேற்றி வைப்பார் என நான் முழு மனதுடன் நம்புகிறேன்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’’விக்ரம்’ பட கொண்டாட்டத்தை அரசியல் கொண்டாட்டம் ஆக்குவோம்..!’ - மக்கள் நீதி மய்யம்

Last Updated : Jun 3, 2022, 9:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.