சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார். விஜய்யின் வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் படத்தில், விஜய் இணைகிறார். இந்த படமும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தப் படத்திற்காக நடிகர்கள் தேர்வு ஏற்கனவே முடிவடைந்துவிட்டதாக லோகேஷ் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இப்படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கௌதம் மேனன் சமீப காலமாக திரைப்படங்களில் கவனம் ஈர்க்கும் வேடங்களை ஏற்று நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் படத்தில் அதுவும் விஜய்யுடன் நடிக்கிறார் என்ற தகவல் கெளதம் மேனன் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:'அவள் உலக அழகியே' நடிகை திரிஷா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்