ETV Bharat / entertainment

கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமண தேதி அறிவிப்பு! - மஞ்சிமா மோகன்

நடிகர் கெளதம் கார்த்திக் - நடிகை மஞ்சிமா மோகன் திருமணம் வரும் 28-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

கெளதம் கார்த்தி - மஞ்சிமா மோகன் திருமண தேதி அறிவிப்பு!

author img

By

Published : Nov 23, 2022, 7:44 PM IST

Updated : Nov 24, 2022, 6:08 AM IST

நவரச நாயகன் கார்த்தியின் மகன் கௌதம் கார்த்திக். இவர் 2013-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கடல்' படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். இவரது நடிப்பில் வெளியான ரங்கூன், இருட்டு அறையில் முரட்டு குத்து, இவன் தந்திரன் உள்ளிட்ட படங்கள் வெற்றிபெற்றன.

கௌதமும் மஞ்சிமாவும் தேவராட்டம் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அப்போது இருவரும் காதலில் விழுந்ததாக கூறப்பட்டது. அதனை இருவரும் சமூக வலைத்தளத்தில் உறுதி செய்தனர். இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய கெளதம் கார்த்திக், "வரும் 28ஆம் தேதி எனக்கும், மஞ்சிமா மோகனுக்கும் கல்யாணம் நடக்க உள்ளது. சென்னையில் தான் திருமணம் நடக்க உள்ளது. உங்கள் ஆசிர்வாதம் இருவருக்கும் வேண்டும். மிகவும் எளிமையாக திருமணத்தை நடத்த உள்ளோம். குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளனர். ரிஷப்ஷன் கிடையாது. திருமணம் மட்டும் தான். அப்பா சம்மதித்துவிட்டார்” என்று கெளதம் கார்த்திக் கூறினார்.

பின்னர் பேசிய மஞ்சிமா மோகன் "கௌதம் தான் முதலில் காதலை சொன்னார். திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன்" என்று கூறினார்.

இதையும் படிங்க: விஜய்க்கு அபராதம் விதித்த போலீஸ்... பின்னணி என்ன?

Last Updated : Nov 24, 2022, 6:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.