ETV Bharat / entertainment

90’ஸ்-களின் பேவரைட் டிவி தொடர்களில் நடித்த குழந்தை நட்சத்திரமான லோகேஷ் தற்கொலை! - லோகேஷ்

90’ஸ் களின் பிரபலமான தொலைக்காட்சித் தொடர்களான ‘மர்மதேசம்’ , ‘ஜீ பூம்பா’ போன்ற தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த லோகேஷ் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார்.

90’ஸ்-களின் டிவி தொடர்களில் குழந்தை நட்சத்திரமான லோகேஷ் தற்கொலை...!

author img

By

Published : Oct 5, 2022, 2:16 PM IST

'மர்ம தேசம்' தொடரில் ராசுவாகவும், ஜீ பூம் பா தொடரில் அருணாகவும் சிறந்த குழந்தை நட்சத்திரமாகவும் திகழ்ந்தவர், லோகேஷ். இந்த நிலையில் அதன்பிறகு பெரிய சீரியல் மற்றும் பட வாய்ப்புகள் கிடைக்காத லோகேஷ் சினிமா துறையில் சிறிய சிறிய பணிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் மாடம்பாக்கத்தில் தனது தாய் தந்தையுடன் வசித்து வந்த லோகேஷூக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. திருமண வாழ்க்கை நல்ல முறையில் செல்லாத நிலையில் அண்மையில் அவரது மனைவி விவாகரத்து கேட்டு லோகேஷுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இதனால் மனமுடைந்த லோகேஷ் மன உளைச்சலில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி காஞ்சிபுரத்தில் இருந்து பேருந்தில் புறப்பட்டு வந்த லோகேஷ் பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்டுள்ளார்.

இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார். அங்கு பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் கொடுத்ததின் பேரில் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் சேர்த்தனர். இரண்டு நாள் சிகிச்சையில் இருந்த லோகேஷ் நேற்று மதியம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

லோகேஷ் மரணம் தொடர்பாக அவரது தந்தை ராஜேந்திரனுக்கு தகவல் கொடுக்கப்பட்டதன்பேரில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மனைவி விவாகரத்து கோரியதால் மன உளைச்சலில் இருந்ததால் தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசாரிடம் அவர் தெரிவித்தார். இதனையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் லோகேஷ் உடல் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூராய்விற்குப்பிறகு அவரது தந்தையிடம் உடல் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அருள்மொழி வர்மனை பாராட்டிய ரஜினிகாந்த்!!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.