ETV Bharat / entertainment

பொங்கலுக்கு துணிவு படத்தைத் தான் பார்ப்பேன் - நாஞ்சில் சம்பத்

author img

By

Published : Nov 8, 2022, 6:00 PM IST

பொங்கலுக்கு துணிவு படத்தைத் தான் பார்ப்பேன் எனவும்; காரணம் நாங்கள் துணிவை விரும்புகிறோம் என்றும்; அதனால் துணிவை பார்க்கிறோம் எனவும் திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.

நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்

ட்ரிப்பர் என்டர்டெயின்மென்ட் - மதுசூதனன் தயாரித்து இயக்குநர் துவாரக் ராஜாவின் இயக்கத்தில் ஆர்.எஸ் கார்த்திக், லிங்கா உள்ளிட்டோர் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள படம், பரோல்.

பரோல் படத்தின் படக்குழுவினருடனான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் ஆர்.எஸ். கார்த்திக், லிங்கா, நடிகைகள் கல்பிகா, மோனிஷா உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் ஆர்.எஸ். கார்த்திக், 'சினிமாவில் புதிதாக வருபவர்கள் நம்புவது கதை. கதை தான் வெற்றி என்பதை நம்பி இந்தப் படத்தை எடுத்துள்ளார்கள். இந்தப் படம் கிடைக்காமல் இருந்தால் வருத்தப்பட்டிருப்பேன். இந்தப் படத்தில் நானும் லிங்காவும் ஒன்றாக நடித்ததில் மகிழ்ச்சி.

இதுவரை வடசென்னை பகுதி என்றால் சண்டைக்காட்சிகள் தான் அதிகமாக இருக்கும்.‌ இந்தப் படத்திலும் இருக்கிறது. நானும் வடசென்னை தான். அங்கு எல்லாம் ஒரிஜினலாக இருக்கும். படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள்' என்று கூறினார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் லிங்கா, 'இயக்குநர் துவாரகாவுக்கு சினிமா என்றால் அவ்வளவு பிடிக்கும்; இது ஒரு வித்தியாசமாக, மாறுபட்ட முயற்சியில் எடுக்கப்பட்ட படம்' எனவும் தெரிவித்தார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய‌ திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத், 'பரோல் யாருக்கும் கிடைப்பதில்லை. ஆனால், நவம்பர் 11இல் எல்லா தமிழர்களுக்கும் கிடைக்கும். இந்தப் பரோல் வாகை சூட வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறேன். குமரி எல்லையில் இருந்து வரலாமா வேண்டாமா என்று எனக்குள் ஒரு பட்டிமன்றம் நடக்க, தற்போது வந்துள்ளேன்.

நான் தமிழ்நாட்டின் அரசியலை ஒரு வெள்ளோட்டமாக பார்த்தால் நான் இருக்கும் இடத்திற்குத் தான் வெற்றி வந்து சேர்ந்திருக்கிறது. பரோலில் நானும் இருப்பதால் இந்தப் படம் வெற்றி பெறும்.
கடைசி காட்சியில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் சொன்னதால் நானும் நடித்தேன். சென்னை என்றாலே வட சென்னை தான். இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும். தமிழ் சினிமாவிற்கு ஒரு பாணி இருந்தது. அந்தப் பாணியில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை தெற்கில் இருந்து வந்த பாரதிராஜா கொடுத்தார்’ என்றார்.

நாங்கள் துணிவை விரும்புகிறோம்
பரோல் படக்குழுவினர்

முன்னதாக சிறைச்சாலை குறித்து பேசியவர், 'அது சித்ரவதைக் கூடம். சமர்ப்பிக்கப்பட்டவர்களின் புகலிடம். ஒரு மனிதனை சின்னாபின்னமாக்கி சிதைக்கும் தொழிற்சாலை’ என்றார். அப்போது பரோல் என்றாலே பலருக்கும் பேரறிவாளன் தான் ஞாபகத்துக்கு வருவார் என்பது குறித்த கேள்விக்கு, 'பேரறிவாளனுக்காக நிறைய பேசி இருக்கிறேன். நான் அவருக்காக பேசியது போல் தமிழ்நாட்டில் வேறு யாரும் பேசவில்லை. அவர் பரோலில் வரவில்லை.

சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்தது. ஆனால் பரோலில் வர வேண்டும் என்று மனு போட்டதற்கு பிறகு இந்த பரோல் கிடைக்கிற வரை அந்த கைதியின் எதிர்பார்ப்பு, அனுபவிக்கும் வலி, துயரம், அதைத் தாண்டி பரோல் கிடைக்கவில்லை என்ற செய்தி வந்ததும் துடித்து போகிறான். எந்த குற்றவாளியாக இருந்தாலும் பரோலில் கைதி வருவதற்கு குற்றவியல் நடைமுறைச்சட்டம் அதை அனுமதிக்கிறது. பரோலில் இருப்பவர் குறித்து இந்தப் படம் வந்திருக்கிறது’ என்று கூறினார்.

அப்போது பொங்கலுக்கு வாரிசு, துணிவு இரண்டு படங்களும் வருகின்றன; எந்தப் படத்தை முதலில் பார்ப்பீர்கள் என்ற கேள்விக்கு, 'துணிவு படத்தைத் தான் பார்ப்பேன்.‌ காரணம் நாங்கள் துணிவை விரும்புகிறோம். அதனால் துணிவைப் பார்க்கிறோம்’ என்றார்.

அப்போது, வாரிசு படத்தில் விஜய்க்குப் பதிலாக உதயநிதி நடித்து ஸ்டாலின் இயக்க வேண்டும் என்று செல்லூர் ராஜூ பேசியது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, 'இது எளிதில் கடந்து போக வேண்டிய ஜோக். உதயநிதியை அரசியல் வாரிசாக பார்க்காமல், கொள்கை வாரிசாக பார்க்கிறேன்.

இதுவரை 250 பாசறைக் கூட்டங்கள் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது என்று, உதயநிதியை பாராட்டியும் பேசினார். இது செல்லூர் ராஜூவுக்கு தெரியாது. கொள்கை வாரிசாக உதயநிதி சரியாக போய் கொண்டு இருக்கிறார். செல்லூர் ராஜூ எந்த காலத்திலும் கடைத்தேற முடியாது என்று கூறினார்.

இன்று இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.‌ உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி லலித் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னும் ஒரு நீதியரசர் கடுமையான கண்டனம் தெரிவித்து இருக்கிறார். உயர்சாதிக்காரர்களுக்கு வருமானம் ரூ.8 லட்சம். அப்படி வருமானம் கொண்டவன் குறைந்தவனா, இவர்கள் எப்படி இந்த முடிவுக்கு வந்தார்கள். உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்கும் நிலையில் நானும் என்னை போன்றவர்களும் இல்லை. இதற்கு திமுக அரசு சீராய்வு மனு கொடுக்க வேண்டும். கொடுக்கும்’ என்று நம்புவதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: ஹீரோவாக களமிறங்கும் 'மைக் செட்' ஸ்ரீராம்... பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.