ETV Bharat / entertainment

வினய் ராய் நடிக்கும் மர்டர் லைவ் - படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் வினய் ராய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'மர்டர் லைவ்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சென்னையில் வெளியிடப்பட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 18, 2022, 12:42 PM IST

சென்னை: இயக்குநர் எம்.ஏ. முருகேஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'மர்டர் லைவ்'. இதில் நடிகர் வினய் ராய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை ஷர்மிளா மாண்ட்ரே நடித்திருக்கிறார்.

இவர்களுடன் ஹாலிவுட் நடிகை நவோமி வில்லோ முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். பிரசாந்த் டி. மிஸாலே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஹிதேஷ் மஞ்சுநாத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை மதன் கவனிக்க, கிராஃபிக்ஸ் காட்சிகளை இங்கிலாந்தைச்சேர்ந்த டி கிரியேட்டிவ் எனும் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

சைக்கோ கிரைம் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை, டாட் காம் என்டர்டெய்ன்ட் லிமிடெட் எனும் நிறுவனம் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''ஹாலிவுட்டில் வெளியான 'ப்ளைன்ட் டேட்', 'ஸ்கை ஹை', 'டெர்மினல் எக்ஸ்போசர்', 'கிளிட்ச்', 'இன் தி கோல்ட் நைட்' ஆகியப் படங்களை எழுதி, இயக்கி, தயாரித்த தயாரிப்பாளர் நிக்கோ மாஸ்டோராகிஸ் இயக்கத்தில் வெளியான 'டாட் காம் ஃபார் மர்டர்' என்ற ஆங்கில படத்தைத் தழுவி 'மர்டர் லைவ்' எனும் இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது.

புத்திசாலித்தனத்துடன் கூடிய கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கிறது. இதன் திரைக்கதை புதுமையாகவும், ஸ்டைலிஷாகவும் இருக்கும். ஒரு சைக்கோ கொலையாளிக்கும், நான்கு பெண்களுக்கும் இடையே நிகழும் சம்பவங்கள் தான் படத்தின் பரபர திரைக்கதை.

இந்தத் திரைப்படம் முழுவதும் இங்கிலாந்தில் படமாக்கப்பட்டது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முழு படப்பிடிப்பும் நடைபெற்றது. இப்படத்தின் நாயகன் உலகில் அனைத்து இடத்திலும் இருக்கும் கணினி மூலமாகவோ, இணையதளம் மூலமாகவோ, ஊடுருவி அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை அரங்கேற்றுவார்.

ஆக்ஷன் காட்சிகளும், பார்வையாளர்களால் எளிதில் யூகிக்க முடியாத சுவாரஸ்யமான திருப்பங்களும் ரசிகர்களை வியக்க வைக்கும்'' என்றார்.

படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: 'நான் காந்தியை மகாத்மா என அழைப்பதில்லை...' - நடிகர் கமல்ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.