மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சமீபத்தில் நிர்வாண போட்டோஷூட் நடத்தினார். இதுமட்டுமல்லாமல், தனது உடம்பில் ஒட்டு துணியும் இல்லாமல் போஸ் கொடுக்கம்படியான புகைப்பட்டங்களை சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளன. ஒருபுறம் அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மறுப்புறம் பெரும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
குறிப்பாக, பெங்காலி நடிகை மிமி சக்ரவர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு பெண் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டால், இந்த சமுதாயம் ஏற்றுக்கொள்ளுமா? இல்லை அந்த பெண்ணுக்குத்தான் இதுபோன்ற பாராட்டுக்கள் கிடைக்குமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதனிடையே, சமூக வலைதளங்களில் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட ரன்வீர் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மும்பை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று (ஜூலை 26) ரன்வீர் சிங் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்தனர். அந்த வகையில், இந்திய தண்டனை சட்டம் 292, 293, 509 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எப்.ஐ.ஆர் மும்பையைச் சேர்ந்த ஷியாம் மங்கரம் என்னும் தொண்டு நிறுவனம் சார்பில் செம்பூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சமூக வலைதளங்களில் வைரலாகும் ரன்வீர் சிங்கின் நியூட் போட்டோஷூட்!