ETV Bharat / entertainment

'விஜய் போல் நடந்துகொள்ளுங்கள் அஜித்..!' - ஆர்.கே.செல்வமணி ஆலோசனை

படப்பிடிப்புகளை நடிகர் விஜய் போல் தமிழ்நாட்டிலேயே வைத்துக்கொள்ளுமாறு நடிகர் அஜித்திடம் இயக்குநரும், ஃபெப்சியின் தலைவருமான ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

’விஜய் போல் நடந்துகொள்ளுங்கள் அஜித்..!’ - ஆர்.கே.செல்வமணி

author img

By

Published : May 3, 2022, 6:38 PM IST

சென்னை: நடிகர் அஜித் குமார் தனது படத்தின் படப்பிடிப்பை தமிழ்நாட்டில் நடத்தப்படாததால் இங்குள்ள திரைப்பட தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் நடிகர் அஜித் குமார் தனது படப்பிடிப்பை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரைப்படத்தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே செல்வமணி சென்னை வடபழனியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர் சங்கம் யாரை வைத்து வேண்டுமானாலும் படப்பிடிப்பை நடத்திக்கொள்ளலாம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.

’விஜய் போல் நடந்துகொள்ளுங்கள் அஜித்..!’ - ஆர்.கே.செல்வமணி
’விஜய் போல் நடந்துகொள்ளுங்கள் அஜித்..!’ - ஆர்.கே.செல்வமணி

இது தொடர்பாக எங்களுக்கு நேரடியாக எந்தக் கடிதமும் வரவில்லை. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பெப்சி க்கும் இடையேயான கருத்து வேறுபாடு தொடர்பாக நாளைய தினம் சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் மே 8 ஆம் தேதி நடைபெற இருப்பதால் அன்று ஒரு நாள் மட்டும் சென்னையில் எந்தவொரு திரைப்பட படப்பிடிப்பும் நடைபெறாது.

நடிகர் அஜித் குமார் தனது படத்தின் படப்பிடிப்பை தமிழ்நாட்டில் நடத்தாததால், தமிழ்நாட்டில் உள்ள திரைப்பட தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் நடிகர் அஜித் குமார் தனது படப்பிடிப்பை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. நடிகர் அஜித்குமார்,இயக்குனர் வினோத்,தயாரிப்பாளர் போனி கபூர் போன்றோர்க்கும் எங்கள் கோரிக்கை இது தான்” எனக் கேட்டுக் கொண்டார்.

மேலும், ”சென்னையில் தற்போது படப்பிடிப்பு நடத்துவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளது. இதே கோரிக்கையை நடிகர் விஜயிடம் நாங்கள் முன்னர் வைத்த போது விஜய் எங்கள் கோரிக்கையை ஏற்றார். தமிழ்நாட்டிலேயே செட் போடுவதற்காக உரிய இட வசதி உள்ளது. பிறமொழி சினிமா துறையினரும் தமிழ்நாட்டில் வந்து படப்பிடிப்பு நடத்துகின்றனர். ஒரு சில படங்களுக்கு வெளியில் சென்று படப்பிடிப்பு நடத்துவது தவிர்க்க முடியாதது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வரும் மே 15 முதல் 'விக்ரம்' பட ட்ரெய்லர் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.