ETV Bharat / entertainment

'என் உயிர் தோழன்' நடிகர் பாபு மறைவு! பாரதிராஜா இரங்கல்!

en uyir thozhan babu: இயக்குநர் பாரதிராஜவின் என் உயிர் தோழன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான பாபு உயிரிழந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

'என் உயிர் தோழன்' நடிகர் பாபு மறைவு! பாரதிராஜா இரங்கல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 2:23 PM IST

சென்னை: இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் 1990ஆம் ஆண்டு வெளியான 'என் உயிர் தோழன்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பாபு. கடந்த 20 வருடங்களுக்கு மேல் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு படுத்தப்படுக்கையாக இருந்த நடிகர் பாபு இன்று (செப் 19) காலமானார்.

படப்பிடிப்பின் சண்டைக் காட்சி ஒன்றிற்காக மாடியில் இருந்து குதித்த போது முதுகு எலும்பு உடைந்தது. பின்னர், திரை வாழ்க்கையே மூழ்கிபோய் 20 ஆண்டுகளுக்கும் மேலாக படுக்கையிலேயே தவித்து வந்துள்ளார் நடிகர் பாபு. நடிகர் பாபுவின் மரணத்திற்கு இயக்குநர் பாரதிராஜா தனது X தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில் அவர், "திரைத்துறையில் மிகப்பெரும் நட்சத்திரமாக வந்திருக்க வேண்டியவன் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த "என் உயிர் தோழன் பாபு"வின் மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்" என பதிவிட்டு உள்ளார்.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் இயக்குநர் பாரதிராஜா, நடிகர் பாபுவை நேரில் சென்று நலம் விசாரிக்கும் போது தேம்பி அழுத காட்சி இணையத்தில் வைரலாகியது. மேலும், நடிகர் பாபுவை அவரது 80 வயது தாயார் மட்டுமே உடனிருந்து பார்த்து வந்தது தெரியவந்துள்ளது.

  • திரைத்துறையில்
    மிகப்பெரும் நட்சத்திரமாக
    வந்திருக்கவேண்டியவன்
    படப்பிடிப்பில் நடந்த விபத்தில்
    30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன்
    வாழ்ந்து மறைந்த
    " என் உயிர் தோழன் பாபு " வின்
    மறைவு மிகுந்த மனவேதனை
    அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல். pic.twitter.com/ANwRUthJbd

    — Bharathiraja (@offBharathiraja) September 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

விக்ரமன் இயக்கத்தில் பெரும்புள்ளி, கோபி பீம்சிங் இயக்கத்தில் தாயம்மா, மற்றும் பொண்ணுக்கு சேதி வந்தாச்சு படங்களில் நடித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு மேல் படுக்க படுக்கையாக இருந்த நடிகர் பாபுவின் மரணத்திற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: Vijay Antony Daughter: நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் திடீர் மரணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.