சென்னை: கமல் ஹாசனின் "விக்ரம்" திரைப்படம் நேற்று (ஜூன் 3) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதனிடையே சத்யம் திரையரங்கில் நடிகர் கமல் ஹாசன் விக்ரம் திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்த்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "மக்கள் ஆதரவு பிரமாதமாக இருக்கிறது. மனோ சரித்ரா படத்தை ஆந்திராவில் எப்படி பாராட்டினார்களோ, சகலகலா வல்லவன் படத்தை எதிர்பார்த்தார்களோ அதே போன்று இந்த படத்திற்கும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த படம் வெளிநாடுகளில் 2,000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதுபோன்ற ஒரு ரிலீசை வாழ்நாளில் நான் பார்த்ததில்லை. போதைப் பொருள்களை பற்றி 80களிலேயே நான் பதட்டப்பட்டேன். அப்பொழுதே ஒரு ஆண்டுக்கு 750 கிலோ கஞ்சா விற்பனை நடப்பதாக செய்திகள் வரும். இப்போது டன் கணக்காக கூட மாறியிருக்கலாம்.
போதைப் பொருள் என்பது உலகளாவிய பிரச்சினை. தென் அமெரிக்காவில் இந்த போதைப் பொருள் அரசியலில் புகுந்து நாட்டையே கைப்பற்றியதை நாம் சரித்திரத்தில் பார்த்திருக்கிறோம். அதிலிருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை சொல்லும் ஒரு படம் தான் விக்ரம்" என்றார்.
இதையும் படிங்க: அஜீத் சாருடன் நடிக்க ‘மரண வெயிட்டிங்’....நடிகை நஸ்ரியா பேட்டி!!