துணிவு vs வாரிசு ; தவறான தகவல்களைப் பரப்பாதீர்கள் - திருப்பூர் சுப்பிரமணியம் - துணிவு ரிலீஸ்
’துணிவு’. ‘வாரிசு’ படங்களின் ரிலீஸ் குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாமென திரையரங்குகள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜயின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் வெளியாக உள்ளது. விஜயின் வாரிசு படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ வாங்கியுள்ளது. அதேபோல், துணிவு படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இதனையடுத்து 'துணிவு' படத்திற்கு அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் விஜயின் 'வாரிசு' படத்திற்கு குறைந்த அளவே திரையரங்குகள் கிடைத்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.
இதனையடுத்து இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது, "இதுவரை எந்தப் படத்திற்கும் திரையரங்கு ஒதுக்கப்படவில்லை. அஜித் நடித்துள்ள 'துணிவு' மற்றும் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.
துணிவு படத்திற்கு 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இதுவரை எந்தப் படத்திற்கும் திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தவறான தகவல்களைப் பகிர வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அஜித்திற்காக துணிவு திரைப்படத்தில் பாடல் எழுதி உள்ளேன் - பாடலாசிரியர் விவேகா