ETV Bharat / entertainment

இந்த வாரம் ஓடிடி ரிலீஸில் வரிசை கட்டும் தீபாவளி திரைப்படங்கள்! - vikram prabhu

This week OTT releases: ராகவா லாரன்ஸின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், விக்ரம் பிரபுவின் ரெய்டு, கார்த்தியின் ஜப்பான் ஆகியவை இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.

இந்த வாரம் ஒடிடி ரிலீஸில் வரிசைக்கட்டும் தீபாவளி திரைப்படங்கள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 12:11 PM IST

சென்னை: இந்த வாரம் ஒடிடி தளங்களில் பல்வேறு மொழி திரைப்படங்கள் வெளியாகின்றன. அதில், தமிழில் முன்னணி நடிகர்கள் நடித்த மூன்று திரைப்படங்கள் வெளியாகின்றது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் கடந்த நவம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 2014ஆம் ஆண்டு சித்தார்த், லக்ஷ்மி மேனன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் ஜிகர்தண்டா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது.

தேசிய விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்ற ஜிகர்தண்டா வெளியாகி, 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உருவாக்கி உள்ளார். இந்த படம் இன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடி‌டி தளத்தில் (Netflix) வெளியாகி உள்ளது.

ரெய்டு: அறிமுக இயக்குநர் கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் ரெய்டு திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. இந்த 'ரெய்டு' படத்திற்கு பிரபல இயக்குநர் முத்தையா வசனம் எழுதியுள்ளார். ரெய்டு படத்தில் வெங்கட் பிரபு, ஸ்ரீ திவ்யா மற்றும் புதுமுகம் நடிகை அனந்திகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 6 வருடங்களுக்கு பிறகு நடிகை ஸ்ரீ திவ்யா இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் இன்று Aha Tamil ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ஜப்பான்: நடிகர் கார்த்தி - இயக்குநர் ராஜுமுருகன் கூட்டணியில் 'ஜப்பான்' திரைப்படம் கடந்த நவம்பர் 10ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. 'ஜப்பான்' திரைப்படம் நடிகர் கார்த்தியின் 25வது படமாக இருந்தாலும், படுதோல்வியைச் சந்தித்தது. ஜப்பான் படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்க, தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் 11ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் (Netflix) வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: 'கூச முனிசாமி வீரப்பன்' ஒரிஜினல் சீரிஸின் வெளியீட்டு தேதி மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.