மாமல்லபுரத்தில் திருமணம் முடிந்த கையோடு திருப்பதி சென்ற விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி , அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வளாகத்தில் போட்டோஷூட் நடத்தினர். அப்போது நயன்தாரா மற்றும் புகைப்படக்காரர்கள் கால்களில் செருப்பு அணிந்து இருந்தனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, விக்னேஷ் சிவன் திருப்பதி திருமலா தேவஸ்தானத்திற்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். அதில் தங்களுடைய திருமணம் திருப்பதியில் நடக்க வேண்டும் என்று விரும்பியதாகவும், ஆனால் தவிர்க்க இயலாத காரணங்களால் சென்னையில் திருமணம் நடைபெற்றதாகவும் , இருப்பினும் திருமணம் முடிந்த கையோடு வீட்டுக்கு கூட செல்லாமல் நேரடியாக திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நாள் எப்போதும் நினைவில் இருக்க வேண்டும் என்பதற்காக கோயிலுக்கு வெளியே போட்டோ எடுத்ததாகவும் , அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் வெளியேறி விட்டு மீண்டும் வந்து போட்டோ எடுத்த போது செருப்பு அணிந்திருந்ததை உணரவில்லை என தெரிவித்துள்ளார்.
செருப்பு அணிந்து சென்ற காரணத்தால் பக்தர்களின் மனம் புண்படுத்தப்பட்டதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் , தாங்கள் நேசிக்கும் இறைவனுக்கு எந்த அவமரியாதையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கமில்லை எனவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Watch video: திருமலையில் நயன் - விக்கி போட்டோ சூட்..!