ETV Bharat / entertainment

’தவறான சில விமர்சனங்கள் மனதிற்கு கஷ்டமாக உள்ளது..!’ - பார்த்திபன்

author img

By

Published : Jul 17, 2022, 7:11 PM IST

தவறான சில விமர்சனங்கள் மனதிற்கு கஷ்டமாக உள்ளது என இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

’தவறான சில விமர்சனங்கள் மனதிற்கு கஷ்டமாக உள்ளது..!’ - பார்த்திபன்
’தவறான சில விமர்சனங்கள் மனதிற்கு கஷ்டமாக உள்ளது..!’ - பார்த்திபன்

இயக்குநர் பார்த்திபன் இயக்கி அவரே நடித்துள்ள 'இரவின் நிழல்' திரைப்படம் கடந்த 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதனைத் தொடர்ந்து பார்த்திபன் மற்றும் அவரது குழுவினர் திரையரங்குகளுக்கு நேரில் சென்று பார்வையாளர்களை சந்தித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று (ஜூலை 17) கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கேஜி திரையரங்கிற்கு வருகை புரிந்த பார்த்திபன் மற்றும் நடிகை பிரிகிதா பார்வையாளர்களை சந்தித்து திரைப்படம் குறித்து கேட்டறிந்தனர். மேலும், திரைப்படம் எடுக்கப்படும் பொழுது இருந்த சவால்களையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பார்த்திபன், ”’இரவின் நிழல்’ படம் ஒரு புது முயற்சி. இது போன்ற படத்தை எடுப்பதற்கு முயற்சி செய்வதே கடினம். மக்களுக்கு என்ன பிடிக்குமோ இதற்கு முன்பு என்ன பிடித்ததோ அதை மட்டுமே வைத்து படம் எடுத்து பணம் சம்பாதித்துக் கொள்ளலாம் என்பதை விட புதிதாக மக்களின் ரசனைக்கு தகுந்தார் போல் புது முயற்சி மேற்கொள்ளலாம் என எடுக்கப்பட்ட படம் இது.

இப்படத்தின் கதை என்பது ஒரு சராசரி கதை அல்ல. பத்திரிகை செய்தி படிக்கும் பொழுது அதிர்ச்சிக்குரிய செய்திகளை எல்லாம் இதில் படமாக்கி உள்ளேன். நான் ஒரு பத்திரிகையாளராகவோ , ஊடகவியலாளராகவோ இருந்திருந்தால் இப்படத்தின் பிளஸ் பாயிண்ட்ஸ் மட்டுமே எடுத்துக் கூறியிருப்பேன்.

இப்படம் மக்கள் பலருக்கும் தெரிய வேண்டும். கமர்சியலாக இந்த படம் வெற்றி அடைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். இப்படத்திற்கு இளைஞர்கள் வரவேற்பு அதிகம் உள்ளது. அவர்களுக்கு என்னுடைய நன்றிகள். பத்திரிகையாளர்களின் விமர்சனத்தினால் தான் இவ்வளவு கூட்டம் வந்துள்ளது. இதுபோன்ற சினிமாவிற்கு ஆதரவு தர வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

மிகப்பெரிய அளவில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மிகப்பெரிய வெற்றியை அடைந்தால் தான் தயாரிப்பாளர்கள் இதுபோன்ற படங்களை எடுப்பதற்கு முன்வருவார்கள். இது போன்ற படம் எடுத்து சரியாக ஓடவில்லை என்றால் புது முயற்சியை எடுப்பவர்கள் தோற்றுவிடுவார்கள்.

ஆங்கில படத்தை பார்க்கும் பொழுது இருக்கின்ற தெளிவு தமிழ் படத்தை பார்க்கும் பொழுது இருப்பதில்லை. தமிழ் படத்தை தனி கலாச்சாரத்திற்குள் வைத்து பார்க்கிறோம் ஆங்கில படத்திற்கு வேறு கண் தமிழ் படத்திற்கு வேறு கண் ஆனால் அனைத்து இடங்களிலும் வன்முறை ஒரே மாதிரி தான் நடக்கிறது.

ஆண்கள் சிலர் பெண்கள் இது போன்ற படத்தை எப்படி பார்ப்பார்கள் என நினைக்கிறார்கள். எதற்காக பெண்களுக்கு ஒரு வரையறையை ஆண்கள் வகுக்கிறார்கள்?. படத்தைப் பார்ப்பதும் பார்க்காமல் இருப்பதும் அவர்களது விருப்பம். தவறான சில விமர்சனங்களால் எதார்த்தமாக ஒரு படத்தை எடுக்க முயற்சிக்கும் பொழுது மனதிற்கு கஷ்டமாக உள்ளது.

தற்பொழுது படத்தின் வருமானத்தை தான் கொண்டாடுகிறோமே தவிர படத்தின் தரத்தை கொண்டாடுவதில்லை. இந்தத் திரைப்படம் வெற்றி அடையும் பொழுது என்னைவிட திறமை வாய்ந்தவர்களுக்கு திரைப்படம் வழிவகுக்கும். புதிதாக முயற்சி செய்யும்பொழுது அதில் கிடைக்கும் வெற்றி என் மகிழ்ச்சி. வேறு நல்ல படங்கள் வரும்பொழுது அதனை நல்ல படம் என கூறிக் அதனை நல்ல படம் என சொல்லும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

பத்து நல்ல படங்கள் வந்தால் இந்நிலை மாறிவிடும். இத்திரைப்படத்தில் இருக்கும் கருத்தை விட படம் எடுக்கும் பொழுது கூறியிருக்கும் கருத்து தோல்விகளைக் கண்டு புழம்ப வேண்டாம். அடுத்த நிமிடம் நமதே என்று நாம் நினைக்க வேண்டும் என்பதுதான்” எனப் பேசினார்.

மேலும், இளையராஜாவிற்கு எம்பி பதவி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “இளையராஜா Music of Paradise என்று நான் பலமுறை கூறியுள்ளேன். எனவே அவருக்கு இந்த ’mp’ பதவி என்பது மிகப்பெரிய பதவி அல்ல என்பது என்னுடைய அபிப்பிராயம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அமீர்கான் படத்தை தமிழில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.