ETV Bharat / entertainment

தமிழ் சினிமாவின் புரட்சி வித்து.. இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் நினைவு தினம் இன்று! - சினிமா செய்திகள்

Remembering K.Balachander: தமிழ் சினிமாவின் இயக்குநர் சிகரம் என போற்றப்படும் இயக்குநர் கே.பாலச்சந்தரின் 9ஆம் ஆண்டு நினைவு தினம், இன்று நினைவு கூறப்படுகிறது.

Remembering K.Balachander
இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் நினைவு தினம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2023, 3:08 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல அசாத்திய நடிகர்களை உருவாக்கி, திரைத்துறையில் யாராலும் அசைக்க முடியாத அளவிற்கு தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர், இயக்குநர் கே.பாலச்சந்தர். அப்படி தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த இயக்குநர் கே.பாலச்சந்தர், தனது 84வது வயதில் உடல்நலக் குறைவால் கடந்த 2014ஆம் ஆண்டு இதே நாளில் காலமானார். இந்நிலையில், இயக்குநர் சிகரம் என போற்றப்படும் கே.பாலச்சந்தரின் நினைவு தினம் இன்று (டிச.23) அனைவராலும் நினைவு கூறப்படுகிறது.

அதாவது, தமிழ் சினிமாவில் பெண் கதாபாத்திரங்களை புரட்சிகரமாக வடிவமைத்து, பல சிறந்த படங்களை இயக்கியவர் கே.பாலச்சந்தர். இவர் தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில் 1930ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை கிராம அதிகாரி என்பதால், அதே ஊரில் பள்ளிப் படிப்பு பயின்றார்.

ஆனால் சிறு வயதிலேயே நாடகம், சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்த கே.பாலச்சந்தர், தனது 12வது வயதிலேயே நிறைய நாடகங்கள், சினிமாக்களைப் பார்க்க ஆரம்பித்தார். இதனால் சினிமா மீது மிகுந்த ஆசை ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடரந்து, சென்னை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி விலங்கியல் முடித்த இவர், கதை எழுதுவது, நாடகங்களில் நடிப்பது ஆகிய திறன்களை பட்டை தீட்டிக் கொண்டதால், கல்லூரி விழாக்களில் இவரது நாடகம் தவறாது இடம்பெறும்.

சென்னை ஏ.ஜி.எஸ் அலுவலகத்தில் 12 ஆண்டுகள் பணிபுரிந்தார். ஓய்வு நேரங்களில் நாடகக் கம்பெனியில் வேலை பார்த்து, நாடகம் இயக்கும் திறமையை வளர்த்துக் கொண்டவர். ஆங்கிலத்தில் வெளியான 'மேஜர் சந்திரகாந்த்' நாடகத்தை தமிழில் மொழிபெயர்த்து இயக்கினார். இந்த நாடகம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இவர் இயக்கிய நாடகங்களில் 'நீர்க்குமிழி', 'நாணல்', 'விநோத ஒப்பந்தம்' உள்ளிட்ட நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை. எம்ஜிஆர் நடித்த 'தெய்வத்தாய்' திரைப்படத்துக்கு வசனம் எழுதி, தனது சினிமா வாழ்க்கையை 1964-இல் துவங்கினார். அடுத்த ஆண்டில் இவரது கதை, வசனம், இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் 'நீர்க்குமிழி' மகத்தான வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து 1981-இல் 'கவிதாலயா' என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார். குறைந்த செலவில் நிறைவான படங்களைக் கொடுத்தவர் கே.பாலச்சந்தர். இன்றைக்கு சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் ரஜினிகாந்த், நாசர், டெல்லி கணேஷ், சார்லி, விவேக், எஸ்.பி.பி., சரிதா, சுஜாதா, பிரகாஷ்ராஜ் உள்பட ஏராளமான முன்னணி நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.

  • அசாத்தியமான எண்ணிக்கையில் திரைப்படங்களை இயக்கிய திறமையாளர்; எத்தனையோ நடிப்புக் கலைஞர்களைத் திரைக்குத் தந்த திண்மையாளர்; தனக்கென்றிருந்த பாணியிலிருந்து தவறாமல் படைப்புகளைக் கொடுத்தவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.

    இன்று அவரது நினைவு நாள். என் மனதில் தந்தைக்கு நிகரான இடத்தை…

    — Kamal Haasan (@ikamalhaasan) December 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள கே.பாலச்சந்தர் தனது கடைசி காலத்தில் 'பொய்', 'ரெட்டைச் சுழி', 'உத்தம வில்லன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரது பெரும்பாலான படங்களில் மனித உறவு முறைகளுக்கு இடையேயான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் கருப்பொருளாக விளங்கின. பெண் கதாபாத்திரங்களை தைரியமான பெண்ணாகவும், குடும்பத்தை தனி ஆளாக தாங்கி நிற்கும் பெண்களாகவும் படைத்தவர்.

கலைஞர்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வருவதில் கை தேர்ந்தவர். 'தண்ணீர் தண்ணீர்', 'அபூர்வ ராகங்கள்', 'எதிர் நீச்சல்', 'வறுமையின் சிறம் சிவப்பு', 'அக்னி சாட்சி', 'வானமே எல்லை', 'உன்னால் முடியும் தம்பி', 'சிந்துபைரவி' உள்ளிட்ட ஏராளமான படங்கள் இவரது புகழுக்கும், திறமைக்கும் சான்றாக அமைந்த படங்கள் எனலாம். அதனைத் தொடர்ந்து, இயக்குநர் சிகரம் எனப் போற்றப்பட்டார். திரைத்துறையில் கமல், ரஜினி உள்ளிட்ட பலர் இவரை குருவாகப் போற்றுகின்றனர்.

'ரயில் சிநேகம்', 'கை அளவு மனசு' உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கி, அதிலும் தனிக்கொடி நாட்டியவர் என்றால் மிகையாகாது. பின்னர் 1995-இல் வாழ்நாள் சாதனையாளர் விருது, 2010-இல் தாதா சாகேப் பால்கே விருது, 8 முறை தேசிய விருதுகள், மாநில அரசின் விருதுகள், பத்மஸ்ரீ, அண்ணா விருது, கலைமாமணி, 12 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகள், ஆந்திர அரசின் நந்தி விருது உள்ளிட்ட பல விருதுகள் வென்று சாதனை படைத்தவர்.

அரை நூற்றாண்டுக்கும் மேல் திரையுலகில் வெற்றி உலா வந்தவரும், திரைப்பட 'உலக பிரம்மா', 'கலையுலக பாரதி' என்றெல்லாம் போற்றப்பட்டவருமான கே.பாலச்சந்தரின் 9வது ஆண்டு நினைவு நாளை நினைவு கூறி, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது நினைவுகளையும், அனுபவங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், அசாத்தியமான எண்ணிக்கையில் திரைப்படங்களை இயக்கிய திறமையாளர். எத்தனையோ கலைஞர்களைத் திரைக்குத் தந்த திண்மையாளர். தனக்கென்றிருந்த பாணியிலிருந்து தவறாமல் படைப்புகளைக் கொடுத்தவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். இன்று அவரது நினைவு நாள். என் மனதில் தந்தைக்கு நிகரான இடத்தை வகிக்கும் என் ஆசிரியருடனான தருணங்கள் நினைவில் எழுகின்றன" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அரசியலாகும் வானிலை முன்னறிவிப்பு.. நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.