ETV Bharat / entertainment

Thunivu: துணிவு படத்தின் கதை இது தான் - இயக்குநர் எச்.வினோத் - பொங்கல்

துணிவு படத்தின் பெயர்க் காரணம், கதை, நடிகர் அஜித்தின் கதாபாத்திரம் குறித்து படத்தின் இயக்குநர் எச்.வினோத் மனம் திறந்து பேட்டி அளித்திருக்கிறார். அது குறித்து கேள்விகளும் பதில்களும்...

துணிவு படத்தின் கதை இது தான் - இயக்குநர் எச்.வினோத்

author img

By

Published : Jan 10, 2023, 4:18 PM IST

Thunivu: துணிவு படத்தின் கதை இது தான் - இயக்குநர் எச்.வினோத்

'துணிவு படத்தில் எது துணிவு? என்ன துணிவு?: படத்தில் துணிவு என்பது அஜித் சாரின் கதாப்பாத்திரம் தான். அதற்காக தான் 'நோ கட்ஸ், நோ குளோரி' (No Guts, No Glory) என்னும் டேக் லைன் வைத்திருக்கிறோம். என்ன துணிவு, எதற்கு துணிவு வேண்டும் என்பது தான் படத்தின் கதை.

துணிவு பண மதிப்பீடு பற்றிய படமா?: பணத்தை மதிப்பீடு பண்ணும் படம் இல்லை. இது சீரியசான படம் இல்லை. எல்லா விஷயங்களையும் சுவாரசியமாக ஜாலியாக சொல்ல முயற்சித்திருக்கிறோம். அதில் பணத்தை கையாள்வது ஒரு பகுதி ஆகும்.

தொடர்ந்து மூன்று படங்கள், ஒரே நடிகருடன் இயக்குநர் இணைந்திருப்பது குறித்து உங்கள் கருத்து: படத்தில் பணிபுரிபவர்களுக்கு கம்ஃபெர்ட்டாக உள்ளதா என்பது தான் முக்கியம். நானும் அஜித் சாரும் முதலில் நேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்தோம், அதேபோல் தான் வலிமை மற்றும் துணிவு படங்களையும் உருவாக்கியுள்ளோம்.

செட்டில் நடிகர் அஜித் எப்படி.. உங்களுக்கு அவருடனான நெருக்கம் என்ன? அவர் ஒரு ஸ்டார் போன்றே நடந்துகொள்ள மாட்டார். பக்கத்து வீட்டு ஆள் போல தான் இருப்பார். செட்டிலும் அவர் ஒரு சாதாரண ஆளாகத் தான் இருப்பார். அவர் சொல்வதில் முக்கியமான விசயம் இருக்கும் என்று நான் நம்புவேன். அதே போல் தான் அவரும் என்னை நம்புவார்.

சினிமாவில் அரசியல்.. அரசியலில் சினிமா உங்கள் பார்வை என்ன?: எதுவாக இருந்தாலும் தனிப்பட்ட தாக்குதல் இருக்கக்கூடாது. அதேபோல், ஒரு விஷயத்தை ஜெனரலைஸ் செய்யக்கூடாது. அதாவது ஒரு துறையில், ஒருவன் தவறு செய்தால் அந்த துறையே தவறு எனக் கூறக்கூடாது. அது அந்த துறையில் சேர நினைப்போரைப் பாதிக்கும். உதாரணத்திற்கு அரசியல் ஒரு சாக்கடை என கூறிக்கொண்டே இருந்தால், அதில் யாரும் புதிதாக சேர மாட்டார்கள். அப்போது அது இன்னும் சாக்கடையாக தான் மாறிக்கொண்டிருக்கும். எனவே, ஒரு நபர் தவறு செய்தால் துறையையே குற்றம் சாட்டக்கூடாது.

படத்தில் நிறைய யூட்யூப் நட்சத்திரங்கள் ஏன்: படத்தில் வரும் சிறு கதாபாத்திரங்களும் எளிதாக மனதில் நிற்க வேண்டும் என்பதற்காகத் தான்.

பான் இந்தியன் படம் பற்றி உங்கள் கருத்து: சில படங்கள் திட்டமிட்டு, பான் இந்தியன் படமாக வெளியிடப்படுகிறது. ஆனால் ஒரு படத்தின் தரத்தை பொறுத்தே, அதை பான் இந்தியன் படமாக மாற்ற வேண்டும். பான் இந்தியன் படமாக எடுக்க வேண்டும் என கதை எழுதக்கூடாது என நினைக்கிறேன்.

பொங்கலில் வாரிசு - துணிவு போட்டி குறித்து உங்கள் பார்வை?: இதனை ஒரு போட்டியாக பார்க்காமல், இது ஒரு ஆரோக்கியமான விஷயமாக மாற்றுவது ரசிகர்கள் கையில் தான் உள்ளது. பொங்கலுக்கு நிறைய நாள் விடுமுறை உள்ளது. அதனால், இரண்டு படங்களும் ஓடும். பணம் இருப்பவர்கள் இரண்டு படங்களையும் பாருங்கள், இல்லாதவர்கள் தேர்ந்தெடுத்து ஒரு படத்தைப் பாருங்கள்.

நடிகர் என்பதையும் தாண்டி அஜித்தின் வேறு ஒரு பரிமாணம் குறித்து?: அஜித் சார் நல்ல ரேஸர், என அவரைப்பற்றி பல விஷயம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், அவர் தனது நிதி நிர்வாகத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ளும் ஒரு நல்ல அக்கவுன்டன்ட். அனைவருக்கும் இதுகுறித்து நல்ல அறிவுரைகளும் சொல்வார்.

மீண்டும் அஜித்துடன் இணைவீர்களா?: அஜித் சார் கூப்பிட்டு படம் செய்யலாம் என்றால் செய்யலாம். கண்டிப்பாக செய்வேன்.

ரசிகர்கள் குறித்து உங்களிடம் பேசியுள்ளாரா?: அவ்வப்போது பேசுவது உண்டு. சினிமா என்பது வாழ்க்கையில் ஒரு பகுதி, அதுவே வாழ்க்கை கிடையாது. எனவே, படம் வந்தால் படத்தை கொண்டாடுங்கள். அதற்காக யாரையும் வெறுக்காதீர்கள் என்பது தான் எப்போதும் அவருடைய அட்வைஸாக இருக்கும்' இவ்வாறு துணிவு படம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கும் இயக்குநர் எச்.வினோத் பேட்டியளித்துள்ளார்.

இதையும் படிங்க: நாளை வெளியாகும் வாரிசு, துணிவு.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.