சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்து சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நீண்ட நாட்களாக தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த விஷாலுக்கு, இப்படம் கொடுத்த வெற்றி அவருக்கு மன நிம்மதியை கொடுத்துள்ளது என்றே கூறலாம். சமீபத்தில் இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
விஷால் பேச்சு: இவ்விழாவில் நடிகர் விஷால் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விழாவில் விஷால் கூறியதாவது, "ஒரு கோடியில் இருந்து 4 கோடி ரூபாய் வரை கையில் பணம் வைத்துள்ள யாரும் படம் எடுக்க வராதீர்கள். அதில் உங்களுக்கு சல்லி காசு கூட கிடைக்காது. இது தான் நிலைமை. இன்னும் இரண்டு ஆண்டுகள், சினிமா தயாரிக்க வராதீர்கள். இந்த பணத்தை வைத்து நிலம் வாங்கி போடுங்கள். 120 படங்கள் இன்னும் வெளியிட முடியாமல் காத்துக்கொண்டு இருக்கின்றன" என்று பேசினார்.
-
சினிமா காப்பாற்றப்பட வேண்டும்.. pic.twitter.com/c7dT3zSZ5n
— Bose Venkat (@DirectorBose) September 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">சினிமா காப்பாற்றப்பட வேண்டும்.. pic.twitter.com/c7dT3zSZ5n
— Bose Venkat (@DirectorBose) September 24, 2023சினிமா காப்பாற்றப்பட வேண்டும்.. pic.twitter.com/c7dT3zSZ5n
— Bose Venkat (@DirectorBose) September 24, 2023
போஸ் வெங்கட் கண்டனம்: விஷாலின் இந்த பேச்சு தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், பலரும் விஷாலுக்கு மறைமுகமாக தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "எங்கும் நசுக்கப்படுவது தான் ஏழ்மை. இங்கு 100 கோடிக்கு மேல் பணம் இரைத்து தவறான படங்களை ஏன் எடுக்கிறீர்கள் என்று கேட்க ஆள் இல்லை.
பாசிச மனப்பான்மை: மக்களுக்கு பிரயோஜனமான தேவையான, அவசியமான திரைப்படங்களை தராமல் தன் கஜானாக்களை மட்டும் நிரப்பும் திரைப்படங்களை எடுக்கும் கார்ப்பரேட்டுகளை கேள்வி கேட்காமல், பணத்தைக் கருத்தில் கொள்ளாமல், மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு வரும் தயாரிப்பாளர்களை தடுத்து நிறுத்துவது, இங்கு இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வு. சாதியக் கொடுமை, மன ரீதியான பிரச்சினைகள் ஆகியவற்றை சினிமாக்களாக அறிவுரைகளாக, அக்கறையுடன் சொல்லும் அருமையான சிறு திரைப்படங்களை தடுப்பது என்பது ஒரு விதமான பாசிச மனப்பான்மை.
பாசிச எண்ணம் யாரிடம் இருந்தாலும் அது தவறு: தமிழகத்தில் தடுக்கப்பட வேண்டிய சினிமா என்பது, எடுக்க கூடாத சினிமா என்பது, யாருக்கும் உபயோகமில்லாமல், எந்தவித பயனையும் எந்த மக்களுக்கும் அளிக்காமல், வெறும் பாக்கெட்டை நிரப்பும் சினிமாக்கள். மொத்தம் 4 பேர் பணத்தை எடுத்துக் கொண்டு பிரித்துச் செல்லும் அந்த புத்திசாலிகள், அவர்களைத் தான் தடுத்து நிறுத்த வேண்டும்.
மாறாக சிறிய பட்ஜெட் என்று வெறுமனே வார்த்தைகளை பயன்படுத்தி நல்ல திரைப்படங்களை தடுப்பது என்பது நம் தமிழ் சினிமாவிற்கு நாமே தலையில் மண்ணை அள்ளி கொட்டுவதற்கு சமம். இந்த பாசிச எண்ணம் யாரிடம் இருந்தாலும் அது தவறு" என்று பதிவிட்டுள்ளார். மேலும் சிலர் விஷாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: SK23: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்!!... கம்பேக் கொடுப்பாரா முருகதாஸ்?