சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மௌன ராகம் படத்தில், நடிகை ரேவதியின் தந்தையாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரா.சங்கரன். இவர் 1974-இல் சிவகுமார் நடிப்பில் வெளியான ‘ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்.
மேலும் எம்.ஆர் ராதா நடிப்பில் வெளியான வேலும் மயிலும் துணை, சிவகுமார், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தேன் சிந்துதே வானம், தூண்டில் மீன், ஒருவனுக்கு ஒருத்தி உள்ளிட்ட 8 படங்களை இயக்கி உள்ளார். படங்களை இயக்கிய போதே நடிக்கவும் செய்தவர்.
1977-இல் வெளியான பெருமைக்குரியவள் படத்திலும், அதனைத் தொடர்ந்து புதுமைப்பெண், ஒரு கைதியின் டைரி என பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார். ஆனால், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மௌன ராகம் திரைப்படம் இவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.
அதில் நடிகர் கார்த்திக், மிஸ்டர் சந்திரமௌலி என அழைக்கும் காட்சிகள் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட நிலையில், அவர் அதன் மூலம் பிரபலமடைந்தார். மேலும் அம்மன் கோவில் கிழக்காலே, இதய கோயில், காதல் கோட்டை, சின்னக் கவுண்டர் என 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ரா சங்கரன் மறைவு: இந்த நிலையில் சென்னை தியாகராயர் நகர், வெங்கட் ராமன் தெருவில் வசித்து வந்த 93 வயதுடைய ரா.சங்கரன், வயது மூப்பு காரணமாக இன்று (டிச.14) காலை 7 மணியளவில் அவரது இல்லத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளைய தினம் அவரது இறுதிச் சடங்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
-
எனது ஆசிரியர்
— Bharathiraja (@offBharathiraja) December 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
இயக்குனர் திரு.ரா.சங்கரன்
சார் அவர்களின் மறைவு
வேதனை அளிக்கிறது.
அவரை இழந்து வாடும்
அவரது குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/SJmO0dApeq
">எனது ஆசிரியர்
— Bharathiraja (@offBharathiraja) December 14, 2023
இயக்குனர் திரு.ரா.சங்கரன்
சார் அவர்களின் மறைவு
வேதனை அளிக்கிறது.
அவரை இழந்து வாடும்
அவரது குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/SJmO0dApeqஎனது ஆசிரியர்
— Bharathiraja (@offBharathiraja) December 14, 2023
இயக்குனர் திரு.ரா.சங்கரன்
சார் அவர்களின் மறைவு
வேதனை அளிக்கிறது.
அவரை இழந்து வாடும்
அவரது குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/SJmO0dApeq
பாரதிராஜா இரங்கல்: இந்நிலையில் பழம்பெரும் இயக்குநரும், நடிகருமான ரா.சங்கரன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இயக்குநர் பாரதிராஜா தனது எக்ஸ் பக்கத்தில் “எனது ஆசிரியர் இயக்குநர் ரா.சங்கரன் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: “நான் படத்தைப் பார்க்கிறேன்”.. சம்பவம் செய்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் - கிளிண்ட் ஈஸ்ட்வுட் ரியாக்ஷன்!